HomeBreaking Newsதனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' .... சூப்பரான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ …. சூப்பரான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' .... சூப்பரான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

நடிகர் தனுஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜ் கிரண், ரேவதி ஆகியோரின் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். அதை தொடர்ந்து ‘ராயன்’ திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். மேலும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இதற்கிடையில் குபேரா, தேரே இஷ்க் மெய்ன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு திரைத்துறையில் நடிப்பு, இயக்கம் என மாறி மாறி பணியாற்றி வருகிறார் தனுஷ். அந்த வகையில் தற்போது இட்லி கடை எனும் திரைப்படத்தையும் தானே இயக்கி நடிக்கிறார். இந்த படம் தனுஷின் 52 வது படமாகும். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். கிரண் கௌசிக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், அருண் விஜய், ராஜ் கிரண், சத்யராஜ், பார்த்திபன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி தேனி, பொள்ளாச்சி, இராமநாதபுரம், பாங்காக் ஆகிய பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து இருப்பதாக படக்குழு சில புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதற்கிடையில் இப்படம் 2025 அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ