HomeBreaking Newsமாற்றுத்திறனாளிகள் மற்றும் துணையாளர்களுக்கு விரைவு, டீலக்ஸ் பேருந்துகளிலும் இலவசப் பயணம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணையாளர்களுக்கு விரைவு, டீலக்ஸ் பேருந்துகளிலும் இலவசப் பயணம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு

-

- Advertisement -

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் பயணிக்கும் துணையாளர்கள் பயன்பெறும் வகையில், இலவசப் பேருந்துப் பயணச் சலுகையை விரிவுபடுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணையாளர்களுக்கு விரைவு, டீலக்ஸ் பேருந்துகளிலும் இலவசப் பயணம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு

இதுவரை தாழ்தளப் பேருந்துகளில் மட்டுமின்றி, தற்போது விரைவு, டீலக்ஸ் மற்றும் புறநகர் (மொஃபுசில்) பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர்கள் கட்டணமின்றிப் பயணம் செய்யும் வகையில் இந்தச் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

we-r-hiring

குளிர்சாதனப் பேருந்துகளுக்கு மட்டும் விதிவிலக்கு

இந்த இலவசப் பயணச் சலுகையானது குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளைத் தவிர்த்து, பிற பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளில் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர்கள் கூடுதல் பேருந்து சேவைகளைப் பயன்படுத்திப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதுடன், அவர்கள் அன்றாடத் தேவைகளுக்காகவும் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காகவும் பயணம் செய்வதை எளிதாக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

MUST READ