HomeBreaking Newsஇன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…

-

- Advertisement -

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிரச்சி கொடுத்துள்ளது.

தங்கம் விலை இன்று (மார்ச் 19, 2026) அதிரடியாகக் குறைந்து இல்லத்தரசிகளுக்கும், நகைப்பிரியர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் விலை, ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 5,160 வரை சரிந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகித முடிவுகள் காரணமாக இந்த அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் தங்கம் விலை இன்று யாரும் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இன்று காலை நேர நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை ஒரு சவரன் ரூ. 1,21,712 என்ற உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், சர்வதேச சந்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களால், மாலை நேர நிலவரப்படி அதன் விலை அதிரடியாகக் குறைந்து ஒரு சவரன் ரூ. 1,16,552 ஆக விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ. 5,160 குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.

இதேபோல், முதலீட்டாளர்களால் விரும்பப்படும் 24 கேரட் சொக்கத் தங்கத்தின் விலையும் இன்று காலை ஒரு சவரன் ரூ. 1,32,312-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாலை நேரத்தில் அது ரூ. 1,27,152 ஆகக் குறைந்தது. இதிலும் சவரனுக்கு ரூ. 5,160 வரை சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் விலை வீழ்ச்சி கடந்த சில மாதங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்தது மற்றும் உலகளாவிய பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களே இந்திய சந்தையில் இந்த அதிரடி விலை குறைவிற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

விலை குறைவிற்கான முக்கிய காரணங்கள்:
அமெரிக்க ஃபெடரல் வங்கி: வட்டி விகிதங்களை மாற்றாமல் அப்படியே வைத்திருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்து டாலர் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

சர்வதேச அழுத்தம்: உலகளாவிய சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் 5,000 டாலருக்கும் கீழ் சரிந்ததே இந்திய சந்தையில் இந்த மிகப்பெரிய மாற்றத்திற்குக் காரணமாகும்.

வெள்ளி விலையும் சரிவு: தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று கிலோவுக்கு சுமார் ரூ. 19,000 வரை சரிந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,29,234-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை வீழ்ச்சி திருமண சீசன் தொடங்க உள்ள நிலையில் நகை வாங்குவோருக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/postal-voting-election-commission-orders-addition-of-5-new-departments/197545

MUST READ