spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking News'OG சம்பவம்' பாடலின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட 'குட் பேட் அக்லி' படக்குழு!

‘OG சம்பவம்’ பாடலின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட ‘குட் பேட் அக்லி’ படக்குழு!

-

- Advertisement -

குட் பேட் அக்லி படத்திலிருந்து OG சம்பவம் பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.'OG சம்பவம்' பாடலின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட 'குட் பேட் அக்லி' படக்குழு!

தமிழ் சினிமாவில் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதைத்தொடர்ந்து இவர் சில படங்களை இயக்கி இருந்தாலும் மார்க் ஆண்டனி திரைப்படம் தான் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. மேலும் இவருக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்க, குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக், ரசிகர்களுக்கு எப்படி விருந்து படைக்கப் போகிறார்? என்பதை திரையரங்குகளில் காண பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நாளை (மார்ச் 18) மாலை 5.05 மணியளவில் குட் பேட் அக்லி படத்திலிருந்து OG சம்பவம் எனும் முதல் பாடல் வெளியாக இருக்கிறது. இது தொடர்பான ப்ரோமோ வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் திரையரங்கம் சிதறட்டும், இதன் பெயர் முழங்க கலக்கட்டும் போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

we-r-hiring

இந்த வீடியோவின் மூலம் இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் இந்த ப்ரோமோ வீடியோவை பார்க்கும்போது இந்த பாடல் வெறித்தனமாக இருக்கும் போல் தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, சுனில், யோகி பாபு, அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ