குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஜித்தின் 63வது படமான குட் பேட் அக்லி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசர் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியது. அதாவது அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக் ரவிச்சந்திரன், ரசிகர்கள் அஜித்தை எப்படி எல்லாம் பார்க்க நினைத்தார்களோ அப்படியெல்லாம் டீசரில் காட்டி இருந்தார். டீசருக்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. எனவே இந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் இந்த படத்தில் இருந்து OG சம்பவம் பாடலும் வெளியாகி இணையத்தை கலக்கியது. அதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடல் குறித்து அறிவிப்பை படக்குழு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது.
அதன்படி இந்த படத்திலிருந்து GOD BLESS U எனும் இரண்டாவது பாடல் நாளை (மார்ச் 30) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் இப்பொழுதே கொண்டாட தயாராகி விட்டார்கள். மேலும் குட் பேட் அக்லி படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.