HomeBreaking Newsசிறப்பான தரமான சம்பவத்தை இனி பாப்பீங்க.... ரஜினியின் பஞ்ச் டயலாக் உடன் வெளியான 'ரெட்ரோ' ட்ரெய்லர்!

சிறப்பான தரமான சம்பவத்தை இனி பாப்பீங்க…. ரஜினியின் பஞ்ச் டயலாக் உடன் வெளியான ‘ரெட்ரோ’ ட்ரெய்லர்!

-

- Advertisement -

ரெட்ரோ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. சிறப்பான தரமான சம்பவத்தை இனி பாப்பீங்க.... ரஜினியின் பஞ்ச் டயலாக் உடன் வெளியான 'ரெட்ரோ' ட்ரெய்லர்!

சூர்யாவின் 44வது படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். அதன்படி சூர்யா பாரிவேல் கண்ணன் என்ற கதாபாத்திரத்திலும், பூஜா ஹெக்டே ருக்மிணி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். அதே சமயம் சூர்யாவும், கார்த்திக் சுப்பராஜும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். சிறப்பான தரமான சம்பவத்தை இனி பாப்பீங்க.... ரஜினியின் பஞ்ச் டயலாக் உடன் வெளியான 'ரெட்ரோ' ட்ரெய்லர்! சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படம் 2025 மே 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது இந்த படம் காதல் கலந்த கேங்ஸ்டர் படம் போல் தெரிகிறது. அதாவது ஏற்கனவே வெளியான தகவலின் படி, காதலுக்காக அடிதடியை கைவிட முயற்சிக்கும் சூர்யாவால், அடிதடியை விட முடியவில்லை. இதனால் அவர் வாழ்வில் நடக்கும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை போல் தெரிகிறது.

அடுத்தது இந்த ட்ரெய்லரில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் இடம்பெற்ற ” சிறப்பான தரமான சம்பவத்தை இனிமேதான் பாப்பீங்க” எனும் பஞ்ச் டயலாக் இடம்பெற்றிருக்கிறது. இது தவிர நடிகை ஸ்ரேயாவின் நடனம், ஆக்சன் காட்சிகள் போன்றவை காட்டப்படுகின்றன. இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ