HomeBreaking Newsதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என அறிவிப்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என அறிவிப்பு!

-

- Advertisement -


திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை 5 மணிக்குத் தீபம் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இந்த ஒரு ஆண்டு மட்டும் கார்த்திகை தீபத்தன்று (கடந்த நவ.24) தீபம் ஏற்றிக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அன்றைய தினம் மலைமீதுள்ள உச்சிபிள்ளையார் கோயிலில் வழக்கமாக ஏற்றும் இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், இன்றைய தினம் (நவ.28) சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்புடன் தீபத்தூணில் கட்டாயம் தீபம் ஏற்ற வேண்டும் என தீர்ப்பளித்தது.

அத்துடன் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் அறங்காவலர் குழுவைக் கலைத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன் , பார்த்திபன் தலைமையில் புதிய கோயில் நிர்வாகக் குழுவை அமைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஒவ்வொரு பொதுமக்களும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்குமாறும், மலைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறும் உச்ச நீதிமன்றம்  கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழகத் தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

thiruparankundram

இதனையடுத்து திருப்பரங்குன்றம் மலை மற்றும் கோவில் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் நேற்று மாலை முதலே சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வருகை தந்துள்ளார். அவர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று மாலை 5 மணிக்குத் தீபம் ஏற்றப்படும் என்றும் அதற்கான  ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்வைக் காண காலை முதலே பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் திருப்பரன்குன்றம் கோவில் பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். அத்துடன் மலை மீது ஏற அனுமதி வழங்குமாறு சி.ஆர்.பி.எஃப் வீரர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

MUST READ