HomeBreaking Newsதிருப்பரங்குன்றம் கோயிலுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் வருகை – மலர் தூவி பொதுமக்கள் வரவேற்பு!

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் வருகை – மலர் தூவி பொதுமக்கள் வரவேற்பு!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் வருகை: மலர் தூவி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு – பூரண கும்ப மரியாதை அளிக்க ஏற்பாடு!திருப்பரங்குன்றம் கோயிலுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் வருகை – மலர் தூவி பொதுமக்கள் வரவேற்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளைக் கண்காணித்து மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் இன்று திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தந்தனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின்படி தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளைக் கண்காணிக்கவும், கள நிலவரங்களை ஆய்வு செய்யவும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, இன்று திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவருக்கும் அப்பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களும் பக்தர்களும் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வருகையையொட்டி கோயில் பகுதியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

இதற்கிடையே, திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நீதிபதிகள் குழுவினருக்குப் பாரம்பரிய முறைப்படி பூரண கும்ப மரியாதை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அங்குள்ள கள நிலவரங்கள் குறித்து நீதிபதிகள் குழுவினர் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். அவர்களின் ஆய்வுக்குப் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

MUST READ