- Advertisement -
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று (நவம்பர் 29), டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும்.
முகாமில் மேற்கொள்ளப்படும் பணிகள்:
1. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்.
2. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குதல்.
3. வாக்காளர் விவரங்களில் திருத்தம் செய்தல்.
4. முகவரி மாற்றம் செய்தல்.
5. மாற்று வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பித்தல்.
