HomeBreaking Newsதிருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் தீவிரம் – மலை உச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்ட 30 கிலோ...

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் தீவிரம் – மலை உச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்ட 30 கிலோ நெய்!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் – 30 கிலோ நெய், 50 மீட்டர் காடா துணி மலை உச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்டது!திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் தீவிரம் – மலை உச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்ட 30 கிலோ நெய்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தீபத்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்காக 30 கிலோ நெய், 50 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் மற்றும் மண் பானைகள் உள்ளிட்ட பொருட்கள் மலை உச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்டன.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், ஸ்தானிக பட்டர்கள் உள்ளிட்ட 13 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, தீபம் ஏற்றும் நிகழ்வையொட்டி பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய துணை ராணுவப் படையான சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் கோவில் வாசல், பழனி ஆண்டவர் கோவில் தெரு, படிக்கட்டுப் பகுதி, சிக்கந்தர் தர்கா, காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் தீபத்தூண் அமைந்துள்ள மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தீபம் ஏற்றுவதற்குத் தேவையான 30 கிலோ நெய், 50 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் மற்றும் மண் பானைகள் உள்ளிட்ட பொருட்கள் மலை உச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்டன. தீபத்தூண் அருகே சுமார் நான்கு அடி உயரத்தில் மரப்பலகைகளைக் கொண்டு மேடை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் ஸ்தானிக பட்டர்களின் ஆலோசனையுடன் இன்று மாலை 5 மணியளவில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருப்பரங்குன்றம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அப்பகுதியில் குவிந்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சர்ச்சைக்குரிய திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இந்த முறை தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் ஏராளமானோர் காத்திருக்கின்றனர். இதனால் திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

MUST READ