விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே காந்தி டாக்ஸ், ஏஸ், ட்ரெயின் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இது தவிர கடைசி விவசாயி பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் புதிய வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர், தனது 52வது திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை இயக்கிய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து யோகி பாபு, சரவணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
ரங்கட் லவ் ஸ்டோரி கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘தலைவன் தலைவி‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி – நித்யா மேனன் இருவரும் கணவன் மனைவியாக நடித்திருக்கின்றனர். காதல், குடும்ப சூழ்நிலைகள் அதற்கிடையில் நடக்கும் அன்பு சண்டைகள் இந்த டீசரில் காட்டப்பட்டுள்ளது. இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகப்படுத்தி இருப்பதோடு இணையத்திலும் வைரலாகி வருகிறது.