- Advertisement -
இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை இரண்டு முறை உயா்வு
சென்னை: கடந்த சில நாள்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயா்ந்துக் கொண்டே செல்கின்றது. சென்னையில் இன்று காலையும் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயா்ந்து ஒரு கிராம் ரூ.10,700க்கும் சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், மாலையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயா்ந்து ஒரு கிராம் ரூ.10,770க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,160க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் ரூ.1,040 உயா்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திருமண வயதில் உள்ள பெண்களை வைத்திருக்கும் பெற்றோா்களும், நடுத்தர வா்க்கத்தினரும், இல்லத்தரசிகளும் பீதியில் உள்ளனா்.



