spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsவிஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்'.... கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ்’…. கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

-

- Advertisement -

விஜய் சேதுபதி நடிக்கும் ஏஸ் படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்'.... கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

விஜய் சேதுபதியின் 51வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஏஸ். இந்த படத்தினை ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் எனும் படத்தை இயக்கிய ஆறுமுககுமார் இயக்கியிருக்கிறார். இதனை 7CS என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க ஜஸ்டின் பிரபாகரன் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வெவ்வேறு விதமான கெட்டப்களில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்'.... கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!இவருடன் இணைந்து யோகி பாபு, ருக்மினி வசந்த் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் தான் இன்று (ஜனவரி 16) விஜய் சேதுபதியின் 47 வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஏஸ் படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

we-r-hiring

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் விஜய் சேதுபதி ட்ரெயின், காந்தி டாக்ஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அத்துடன் இன்னும் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ