விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து இவர் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்று வருகிறார். தற்போது இவர் ஆர்யன், ஓர் மாம்பழ சீசனில் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களில் நடித்திருந்தார் விஷ்ணு விஷால். இந்த இரண்டு படங்களுமே வெற்றி படங்களாக அமைந்திருந்தாலும் ராட்சசன் திரைப்படமானது தரமான க்ரைம் திரில்லர் படமாக அமைந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. இந்நிலையில் மூன்றாவது முறையாக இந்த கூட்டணி புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளது. இந்த படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது இருந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.
Elated to present you all ‘IRANDU VAANAM’ from your beloved combo of Vishnu Vishal & director Ramkumar after Mundasupatti & Ratsasan.Starring the talented & the sensational Mamitha Baiju💚
A Dhibu Ninan Thomas Musical 🎶@TheVishnuVishal @_mamithabaiju @dir_ramkumar… pic.twitter.com/GN4X4SJz1r
— Sathya Jyothi Films (@SathyaJyothi) March 15, 2025
அதன்படி இப்படத்திற்கு இரண்டு வானம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்க்கும்போது இப்படம் காதல் சம்பந்தமான கதைக்களம் போல் தெரிகிறது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ராம்குமார், விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் இப்படம் ராட்சசன் படத்தை போல் மாபெரும் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.