ஏழு கடல் ஏழு மலை படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் ராம். இவரது இயக்கத்தில் தற்போது பறந்து போ எனும் திரைப்படமும் உருவாகி வருகிறது. அதேசமயம் இவர், நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோரின் நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதற்கு முன்பாக பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இருந்து ட்ரெய்லரும் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது இந்த படத்தில் சூரி சாதாரண மனிதனாகவும், நிவின் பாலி மரணமே இல்லாத நபராகவும், நடிகை அஞ்சலி மாயப் பெண்ணாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த ட்ரெய்லரே விறுவிறுப்பாக செல்கிறது. ஆகையினால்
இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது இயக்குனர் ராமின் மற்ற படங்களை போல் இந்த படமும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருப்பது போல் தெரிகிறது.இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த ட்ரெய்லரின் இறுதியில் இந்த படம் 2025 மார்ச் மாதத்தின் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.