2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆரம்பக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் முக்கிய அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையிலேயே அபார முன்னிலை பெற்று கவனம் ஈர்த்துள்ளார்.

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் களமிறங்கிய செங்கோட்டையன், சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அவர் இந்தத் தொகுதியில் 9-வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவை விட்டு விலகிய பின்னர், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், இந்தத் தேர்தலில் முதல் முறையாக அந்தக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அவர் 7,665 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அவரைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் நா. நல்லசிவம் 5,434 வாக்குகளுடன் மற்றும் அதிமுக வேட்பாளர் வி.பி. பிரபு 4,333 வாக்குகளுடன் பின்தங்கினர்.
இந்த வெற்றி குறித்து பேசிய செங்கோட்டையன், 2026 தேர்தல் தவெக வரலாற்றில் முக்கிய இடம் பெறும் என்றும், 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று கட்சி ஆட்சியை அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவரது இந்த ஆரம்பக்கட்ட வெற்றி, தவெக ஆதரவாளர்கள் மற்றும் கட்சி வட்டாரங்களில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026 தேர்தல் – கூடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் திராவிட மணி ஆபார வெற்றி
