spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஓரணியில் தமிழ்நாடு - தன்னம்பிக்கையின் முழக்கம்

ஓரணியில் தமிழ்நாடு – தன்னம்பிக்கையின் முழக்கம்

-

- Advertisement -

என்.கே.மூர்த்தி

ஓரணியில் தமிழ்நாடு என்பது வெறும் கோஷம் அல்ல, அது நமது மொழியை பாதுகாக்கவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் மக்களை தட்டி எழுப்புகின்ற தன்னம்பிக்கையும், லட்சியமும் கலந்த போர் முழக்கம்.

we-r-hiring

“ஆயிரம் மைல்களுக்கான பயணம் ஒரு சின்ன அடியில் இருந்தே தொடங்குகிறது” என்று சீன தத்துவ ஞானி லாவோட்சு கூறினார். அது போன்று, ஒன்றிய அரசின் ஆணவப் போக்கிற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வைத்திருக்கும் முதல் அடி “ஓரணியில் தமிழ்நாடு”.

ஒன்றிய அரசு தமிழர்களுக்கு எதிராக செய்யும் அரசியல் சூழ்ச்சியை, துரோகத்தை சாதாரணமாக கடந்து போக முடியாது. அப்படி கண்டுக்கொள்ளாமல் ஒதுங்கி செல்வது தாயை தாரை வார்த்து கொடுப்பதற்கு சமமானது. அதை ஒருபோதும் திராவிட இயக்கங்கள் செய்யாது.

அந்த துரோகச் செயலை செய்வதற்கு தமிழ்நாட்டில் அதிமுக, நாம் தமிழர் கட்சி போன்ற ஏராளமான அமைப்புகள் இருக்கிறது. அவர்களைப்பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லி புரியவைத்து, போராட்ட களத்திற்கு தயார்படுத்துகின்ற மகத்தான பணியின் தொடக்கம் தான் ஓரணியில் தமிழ்நாடு என்பது.

ஒரு நாட்டை ஆளுகின்ற தலைவனுக்கு தன்னம்பிக்கையும் லட்சியமும் அவசியம். தலைவன் தான் ஒரு நாட்டின் முகம். தலைவன் முன் மாதிரியாகவும் சுறுசுறுப்பாகவும், தன்னம்பிக்கையுடனும் இயங்கினால், மக்களும் உற்சாகத்துடன் உழைப்பார்கள். மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். தலைவன் சோம்பேறியாக, பதவி கிடைத்தது போதும் என்று நினைத்து அகப்பட்டதை எல்லாம் அபகரிக்க முயன்றால் நாட்டு மக்களும் அப்படித்தான் இருப்பார்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற நாள் முதல் காலா காலமாக ஒதுக்கப்பட்டிருந்த பெண்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்றும், பெண் பிள்ளைகள் கல்வியில் முன்னேற வேண்டும் என்றும், மாநிலத்தின் கல்வித்தரம் உயரவேண்டும் என்றும், தமிழ்நாட்டை முதன்மையான மாநிலமாக மாற்றுவதற்கான லட்சிய நோக்கத்தில் கடுமையாக உழைத்து வருகிறார். மக்களுக்கு தேவையான பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.அதனால் தமிழ்நாடு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறது.

பாஜக போன்ற தீய சக்திகள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் முயற்சி செய்து வருகின்றன. நமது மொழியை அழித்து இந்தியை திணிப்பதற்கு பல வகைகளில் நெருக்கடிகளை கொடுக்கிறார்கள். ஒன்றிய அரசு தரவேண்டிய ரூ.2152 கோடி ரூபாய் கல்வி நிதியை கொடுக்க மறுக்கின்றார்கள். கீழடியில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஆராய்ச்சியை ஏற்க மறுக்கிறார்கள். இந்தியாவில் தமிழன்தான் பூர்வக்குடி, மூத்த முன்னோடி என்பதை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் நமது ஒன்றிய அரசு மறுக்கிறது. இதுபோன்ற பல இன்னல்களை தமிழ்நாட்டிற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்ச்சிகளை, நெருக்கடிகளை சமாளிக்க வேண்டும் என்றால் மக்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அவசியம் தேவைப்படுகிறது.

1930 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு பொிய பொருளாதார மந்தம் ஏற்பட்டது. உற்பத்தி இல்லை, வேலைவாய்ப்பு இல்லை. நாடு அல்லலுற்றது. மக்கள் வழிதெரியாமல் திகைத்து தவித்து வந்தனா். அப்போது பிராங்களின் ரூஸ்வெல்ட் என்பவா் அரசியலில் நுழைந்தாா்.

பயம் தான் நம்மை பயமுறுத்துகிறது பயத்தை உதறி எறிவோம்! என்று வீரகா்ஜனை செய்தாா். புத்திசாலித்தனமான இளைஞா்களை அழைத்து புதுத்திட்டங்களை வகுக்கக் செய்தாா். தொழில் தொடங்க, உற்பத்தியை அதிகாிக்க தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்துகொடுத்தது. நான்கு ஆண்டுகளில் அமொிக்கா தலை நிமிா்ந்து எழுந்து நின்றது.

லட்சியம் என்பது ஒரு மகத்தான சக்தி. நாட்டு மக்கள் ஒவ்வொருவரிடையேயும் அதே லட்சியம் துடிக்கும் போது நாட்டின் மொத்த சக்தியும் கூடுகிறது. அந்த ஐக்கிய சக்தியானது சாதிக்க முடியாதவற்றையெல்லாம் சாதிக்கிறது. ஆகவே தான் ஒரு நாட்டின் தலைவனின் பொறுப்பு நாட்டு மக்களை லட்சியத் தீயில் தொட்டு எழுப்பி, அனைவரையும் ஒரே நோக்கத்தோடு கொண்டு செல்லும் திறன் தலைவனுக்கு அவசியமாகிறது. அப்போது அந்த தலைவன் ஒரு மகத்தான தலைவனாக உயா்ந்து நிற்கின்றான். அந்த மகத்தான தலைவன் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை உலகம் புரிந்து கொண்டது.

MUST READ