spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபனையூருக்கு வரும் அமித்ஷா! விஜய் சர்வே பித்தலாட்டங்கள்! எடப்பாடி, என்டிஏ கதை முடிஞ்சது! தராசு ஷ்யாம்...

பனையூருக்கு வரும் அமித்ஷா! விஜய் சர்வே பித்தலாட்டங்கள்! எடப்பாடி, என்டிஏ கதை முடிஞ்சது! தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

துஅதிமுக, பாமக கட்சிகள் பிரிந்துகிடக்கும் போது அமித்ஷா தமிழகம் வருவதால் அவர்களை ஒருங்கிணைப்பது என்பது சாத்தியமற்றது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அமித்ஷா தமிழக வருகை குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- விஜயுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு என்று செய்திகள் வெளியானபோது எனக்கு அவர் யார் என்று தெரியவில்லை. மயிலாடுதுறையில் இருந்து ஒரு பிராமணர் எப்படி டெல்லிக்கு போய் இவ்வளவு செல்வாக்கு ஆகினார் என்று யோசித்தேன். நண்பர்களிடம் விசாரித்தபோது அவர் மயிலாடுதுறையில் போட்டியிட இடம் கேட்டதும், பிடிஆர் ஆடியோவை வெளியிட்டதால் அவருக்கு திமுக சீட் தர மறுத்ததும், வழக்கறிஞர் சுதாவுக்கு பின்னர் சீட் தரப்பட்டதும் தெரியவந்தது. ராகுல்காந்தி மூலம் ராஜ்யசபா எம்.பி ஆக முயற்சித்தார். சிதம்பரத்தை எம்.பி. ஆக விடாமல் தடுத்தார் என்பன போன்ற விவரங்கள் பின்னர்தான் வெளியாகியது. இந்த நிலையில், செல்வப்பெருந்தகை, கட்சியில் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்த ஐவர் குழு இருக்கும்போது, பிரவீன் சக்கரவர்த்தி யார்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

பிரவீன் சக்கரவர்த்தி, விஜய் கட்சியில் இணையப் போகிறார். அதற்காக தான் இப்படி குழப்புகிறார். விஜயை சந்தித்து பேசியதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். முன்பு விஜய் ராகுல்காந்தியை சந்திக்க செல்கிறபோது பிரவீன் சக்கரவர்த்தி ஏற்பாடுகளை செய்து கொடுத்திருப்பார். இருவருக்கும் நட்பு இருக்கும். பிரவீன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலோ, அவருக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டாலோ அவர் தவெகவுக்கு செல்லப்போகிறார். அப்படி சென்றால் அவருக்கு மீண்டும் மயிலாடுதுறை தொகுதி கூட கிடைக்கலாம். எல்லாம் கணக்கு பண்ணிதான் அவர் செல்கிறார்.

திமுகவை எதிர்க்கும் கட்சிகள் ஓரணியில் திரண்டால்தான் வெற்றிக்கு சாத்தியம். ஆனால் அந்த கட்சிகளுக்குள் இருக்கும் பிளவை நீங்கள் எப்படி சரி செய்ய போகிறீர்கள்? அந்த கட்சிகளை ஒருங்கிணைக்க பாஜகவால் எப்படி முடியும்? அதிமுகவை ஒருங்கிணைக்க அமித்ஷாவிடம் கேட்டுக்கொண்டதாக ஓபிஎஸ் சொல்கிறார். அவர்கள் தானே ஒருங்கிணைக்க முடியும். அமித்ஷாவால் எப்படி ஒருங்கிணைக்க முடியும்? மருத்துவர் ராமதாஸ் தரப்பில் அன்புமணி மீது டெல்லி காவல்துறையில் கிரிமினல் மோசடி வழக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. சிபிஐயிடம் புகார் அளிக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. இப்படி செய்வதன் மூலம் தங்களுக்கும் அன்புமணிக்கும் தொடர்பு இல்லை என்று சொல்கிறார்கள். அமித்ஷா சொன்னாலும் நாங்கள் கேட்க மாட்டோம். மாம்பழ சின்னம் கிடைக்காது என்று உறுதிபடுத்தி உள்ளனர்.

பாமகவில் சமரசத்திற்கு வாய்ப்பு கிடையாது. அதிமுகவிலும் பிரிந்தவர்களை சேர்க்க வாய்ப்பு கிடையாது. எடப்பாடி பழனிசாமி இப்படி முடிவு எடுக்கிறபோது அதிமுக இன்னும் சிதறும். எல்லோருக்கும் ஒரு கணக்கு உள்ளது. அதிமுக வாக்குகளில் பிளவு ஏற்பட்டால் நம்மால் வெற்றி பெற முடியாது என்று அவர்களுக்கு தெரியும். அப்போது அவர்கள் வெற்றி பெறும் கட்சிக்கு செல்வார்கள்.

செங்கோட்டையன், இன்றைக்கு அறிக்கை விட தொடங்கிவிட்டார். இதில் விஜய் கட்சிக்கு நஷ்டம் ஏற்படுகிறது. புதிய கட்சி என்கிற பிம்பம் போகிறது. பழைய செட்டுகளாக வருவார்கள். இதேபோல் அதிமுகவில் இருக்க பிடிக்காதவர்கள் சிலர் திமுகவுக்கும் செல்வார்கள்.  உடுமலை ராதாகிருஷ்ணன், தங்கமணி செல்வதாக தகவல்கள் அடிபடுகின்றன. பாஜகவிலும் அண்ணாமலை பாஜக, நயினார் நாகேந்திரன் பாஜக என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. டெல்லி போய்விட்டு வந்து அண்ணாமலை தானாக செய்தியாளர்களை சந்திக்கிறார். ஒருவர் மீது மற்றொருவர் புகார் அளிக்கவில்லையே தவிர இருவரும் தனித் தனியாக தான் இருக்கிறார்கள்.

இப்படி அதிமுக, பாஜக, பாமக என மூன்று கட்சிகளும் பிரிந்துகிடக்கும் போது எப்படி இவர்கள் வாக்கு வங்கியை உருவாக்கிட போகிறார்கள்? தற்போது என்டிஏ கூட்டணிக்கு 30 -35 சதவீத வாக்குகள் இருக்கும் என கருதப்படுகிறது. தற்போதுள்ள நிலைமையை பார்த்தால் இன்னும் குறையும் என்றே நினைக்கிறேன். வாக்குகள் 4 முனை, 5 முனை என்று பிரிகிற போது திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரியும்.

அதிமுக – தவெக கூட்டணி அமையவே அமையாது. காரணம் விஜய் தன்னை ஒரு முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்கிறார். அதிமுக கூட்டணிக்கு சென்றால்? யார் முதலமைச்சர் வேட்பாளர் என்கிற கேள்வி எழும். அப்போது விஜய் எப்படி அங்கே செல்வார்? அப்படியான ஒரு கற்பனையை வளர்த்ததே எடப்பாடி பழனிசாமியின் தவறு. தற்போது அது இல்லை என்று தெரிந்த உடன் மிகவும் பலவீனமாக தெரிகிறது. விஜய், சீமான் ஆகியோர் ஒரு போதும் கூட்டணிக்கு செல்ல மாட்டார்கள்.  குறைந்தபட்சம் இந்த ஒரு தேர்தலுக்காகவது செல்ல மாட்டார்கள். மிக இயல்பாக அது அப்படிதான் செல்கிறது. எனவே செங்கோட்டையனை, அமித்ஷா அனுப்பி வைத்தார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

அமித்ஷா, பனையூருக்கு வந்து விஜயுடன் கூட்டணி பேசுவார் என்று செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் எடப்பாடி கூட்டணியை தான் அமித்ஷா பெரிதாக நினைக்கிறார். அப்போதும் அதிமுகவில் பிரச்சினைகள் இருக்கவே செய்தது. அப்போது அமித்ஷா வந்து என்ன சாதிக்க போகிறார்? காரணம் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய நிலைப்பாடு என்பது பெரியது. அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்து, நட்சத்திர ஓட்டலில் தங்கட்டும். ஆனால் அவர் என்ன செய்வார்? அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரத்தில் அவரால் பெரிதாக எதுவும் சாதிக்க முடியாது. 2026 தேர்தலுக்கு பிறகு கிடைக்கும் புள்ளி விபரங்கள் தான் தமிழ்நாட்டு அரசியலை மாற்றும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ