Homeசெய்திகள்கட்டுரைதிமுகவ அழிக்கிறியா! ஓட்டு இருக்கா! புத்தி வேணும் விஜய்! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

திமுகவ அழிக்கிறியா! ஓட்டு இருக்கா! புத்தி வேணும் விஜய்! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

-

- Advertisement -

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதை எதிர்க்கும் திமுக தப்பி பிழைத்துக்கும். ஆனால் எஸ்.ஐ.ஆரை ஆதரிக்கும் அதிமுக, பாஜக கட்சிகள் வீழ்ச்சியை சந்திக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி எச்சரித்துள்ளார்.

we-r-hiring

தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேசியதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தவெக சிறப்பு பொதுக்குழுவில் பேசிய விஜய் 2026 தேர்தலில் திமுக Vs தவெக என்று தான் போட்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் நிச்சயம் அப்படி இருக்காது. விஜய்  எவ்வளவு அழுத்தி சொன்னாலும் அது உண்மை அல்ல. அப்படியான தோற்றத்தை உருவாக்க விஜய் பார்க்கிறார்.  அதிமுகவை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களிடம் 20 சதவீதம் வாக்குகள் இருக்கிறது. 1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் சுப்பிரமணிய சுவாமியும், வாழப்பாடி ராமமூர்த்தியும்தான் ஜெயலலிதாவுக்கு எதிரான அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். ஆனால் கடைசியில் அதை அறுவடை செய்தது கலைஞர்தான்.

கடைசி ஒரு மாதத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மூப்பனார் வெளியேறி, கலைஞருடன் கை கோர்த்தார். அந்த வாக்குகளை எல்லாம் கலைஞர் அறுவடை செய்தார். 1994ல் சிவாஜி கணேசன் தன்னுடைய கட்சியை, காங்கிரசில் இணைத்தார். அந்த விழா மதுரையில் மிக விமரிசையாக நடைபெற்றது. அரசு மீதான அதிருப்தி அதிகமாக திமுக வேண்டாம் என்று மக்கள் முடிவு செய்தால் அதிமுகவுக்கும், அதிமுக வேண்டாம் என்றால் திமுகவுக்கும் தான் வாக்களிப்பது தான் கடந்த கால வரலாறு. அது இம்முறை அப்படியே மாறிவிடும் என்று தோன்றவில்லை.

தேர்தல் நாள் நெருக்கத்தில் திமுக வேண்டாம் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று அதை அறுவடை செய்வதற்கான முதல் வாய்ப்பு அதிமுகவுக்கு தான் இருக்கிறது. ஒருவேளை அதை விஜய் கட்சி அறுவை செய்ய விரும்பினாலும், அதை செய்யும் அளவுக்கான கட்டமைப்பு வசதிகள் அந்த கட்சியிடம் கிடையாது. விஜயினுடைய ஆதரவாளர்கள் என்பவர்கள் ஜென் ஸீ இளைஞர்கள் தான். அவர்களை முதலில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். எஸ்.ஐ.ஆர். வந்து எல்லாவற்றையும் காலி செய்யப் போகிறது. எனவே விஜய் மற்றும் அவருடைய கட்சியினர், இது குறித்துதான் முதலில் கவலைப்பட வேண்டும். விஜய்க்கு வந்த கூட்டத்தில் எத்தனை சதவீதம் வாக்குகளாக மாறும் என்பதை தாண்டி, முதலில் அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு நடந்த தவெக சிறப்பு பொதுக்குழுவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் விமர்சித்து பேசுகிறார். அவருடைய பேச்சை பொருட்படுத்த தேவையில்லை. கோபம் இருந்தால் மட்டும் போதாது. களத்தில் எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள். ஒரு தேர்தலை கூட எதிர்கொள்ளளாத விஜய், இனி தங்களுடைய ஆட்டம் வெறித்தனமாக இருக்கும் என்கிறார். உங்கள் எதிரி திமுக என்கிறபோது, அவர்களை வாக்குகள் மூலமாக தான் வீழ்த்த முடியும். அதற்கு உங்கள் ஆதரவாளர்களை முதலில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

திமுகவை பொறுத்தவரை சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்கள்.  அரசியல் ரீதியாக வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். அதேநேரத்தில் உதவி மையம் என்கிற ஒன்றை தொடங்கி எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு உதவுகிறார்கள். அப்படிதான் ஒரு அரசியல் கட்சி செயல்பட வேண்டும். எஸ்ஐஆர் என்பது ஒரு வருடத்தில் செய்ய வேண்டிய பணியாகும். ஆனால் தற்போது ஒரு மாதத்தில் செய்கிறார்கள். கடந்த காலங்களில் தேர்தல் ஆணையம் அதிகபட்ச வாக்காளர்களை வாக்களிக்க செய்ய வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் தற்போதைய தேர்தல் ஆணையம் அதிகபட்ச வாக்காளர்கள் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில அதிமுக – பாஜகவின் அணுகுமுறை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. அதிமுக, பாஜகவில் இருக்கும் தொண்டர்களிடம் பேசுகிறபோது, எஸ்.ஐ.ஆரை தங்கள் கட்சிகள் ஆதரிப்பது குறித்து அவர்கள் வருத்தப்படுகிறார்கள். எஸ்.ஐ.ஆரை எதிர்க்கும் திமுக இதில் இருந்து தப்பி பிழைக்கும். ஆதரிக்கும் அதிமுக, பாஜக கோட்டை விடும். எஸ்.ஐ.ஆரை ஆதரித்து அதிமுக உச்சநீதிமன்றம் போகும் என்று ஜெயக்குமார் சொல்கிறார். அது எவ்வளவு ஆபத்தானது என்று அவருடைய கட்சிக்காரர்களை கேட்டாலே அவருக்கு தெரிந்துவிடும். விண்ணப்பத்தை வழங்காவிட்டலே ஒட்டுமொத்தமாக நீக்கிவிடுவார்கள். எனவே இது குறித்து விஜய் கவலைப்பட வேண்டும். வாக்காளர் பட்டியலில் தன்னுடைய ஆதரவாளர்கள் சேர்க்கப்படுவதை விஜய் உறுதிசெய்திட வேண்டும்.

அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவை யாரும் தொட்டுப் பார்க்க முடியாது என்று சொல்கிறார். தவெகவால் திமுகவை அழிக்க முடியும் என்பது முட்டாள்தனமானது. அதற்கெல்லாம் வாய்ப்புகளே கிடையாது. வேண்டுமெனில் சவால் விடுக்கலாம். தலைவலி ஏற்படுத்தலாம். வாக்கு வங்கியை ஓரளவு பிரிக்கலாம். திமுக என்கிற ஒரு பெரிய நிறுவனத்தை தோற்கடிக்கலாம். ஆனால் அழிக்க முடியாது. கலைஞர் அதிமுகவை வீழ்த்துவோம் என்றுதான் சொல்வார். ஒருபோதும் அதிமுகவை அழிப்போம் என்று சொன்னது கிடையாது. பண்பட்ட தலைவர்கள் அப்படிதான் பேசுவார்கள். ஆனால் திமுகவை அழிப்போம் என்பது ஆணவப் பேச்சாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ