spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபாஜக கூட்டணிக்கு ஆப்பு வைத்த ஹெச்.ராஜா! திமுக கதவை தட்டிய ராமதாஸ்!

பாஜக கூட்டணிக்கு ஆப்பு வைத்த ஹெச்.ராஜா! திமுக கதவை தட்டிய ராமதாஸ்!

-

- Advertisement -

திமுக கூட்டணிக்கு வருவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கிரீன் சிக்னல் காட்டிவிட்டார். முதலமைச்சர் கூட்டணி கதவை திறக்காதது தான் தற்போதைய பிரச்சினை என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் செல்வப் பெருந்தகை சந்திப்பு, திமுக – மதிமுக இடையிலான மோதல் போக்கு உள்ளிட்டவை குறித்து வல்லம் பஷிர் யூடியூப் சேனல் ஒனறுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்துள்ளது அரசியல் ரீதியான சந்திப்புதான். ஆனால் இது எதை நோக்கி பயணிக்க போகிறது என்பது வருங்காலத்தில் நாம் தீர்மானிக்க முடியும். செல்வப்பெருந்தகை சந்தித்ததால் அவர் திமுக கூட்டணிக்கு வருகிறார் என்பது கிடையாது. ஏனென்றால் கூட்டணியை தீர்மானிக்கின்ற இடத்தில் இருப்பது திமுகதான். ராமதாஸ் ஏற்கனவே திமுக கூட்டணிக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னும் கூட்டணி கதவுகளை திறக்காமல் உள்ளார். அதுதான் இங்கே இருக்கிற பிரச்சினை.

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலுக்கான கூட்டணியாக அல்லாமல், தமிழ்நாடு நலன் சார்ந்து இருக்கிற கட்சியாக உள்ளன. அவர்களை கைவிட முடியாது. விடுதலை சிறுத்தைகள் நேர் எதிர்க்கட்சிகள் என்று பாமகவையும், பாஜகவையும் பிரகடனம் செய்துள்ளது. அப்படி உள்ள போதும் ராமதாஸ் – அன்புமணி மோதல் விவகாரத்தில் மலிவான அரசியல் செய்யாமல் மிகவும் பண்பட்ட நிலையோடு நடந்து கொள்கிறார். பாமக நன்றாக இருக்க வேண்டும். அந்த கட்சி அழிந்துபோக கூடாது என்று சொல்கிறார். திடீர் பாசம் ஏன் என்று அன்புமணி கேட்கிறார்? பிரச்சினை வருகிறபோது தானே நண்பர் யார்? எதிரி யார் என்றும் தெரியும்.

துணை வேந்தரின் இந்த பழிவாங்கும் செயல் கண்டிக்கதக்கது – ராமதாஸ் கண்டனம்!

திமுக கூட்டணியில் ஆர்.கே.நகர் தேர்தல் முதல் மதிமுக தொடர்கிறது. இந்த கூட்டணி 3 தேர்தல்களை சந்தித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் துணை மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகள் அந்த கட்சி வழங்கப்பட்டிருக்கிறது. வாரிய உறுப்பினர் பொறுப்புகளையும் மதிமுகவினருக்கு முதலமைச்சர் வழங்கியிருக்கிறார். இப்படி கூட்டணியில் மதிமுகவுக்கு முக்கியத்துவம் அளித்த நிலையில், அக்கட்சியின் பொதுக்குழுவில் முதலமைச்சரை விமர்சிக்கிறார்கள். தற்போது வேறு பக்கம் செல்வதற்கு முயற்சிக்கிறீர்கள். அதனால்தான் 12 இடங்களில் போட்டி என்று பொதுக்குழுவில் தீர்மானமாக போடுகிறார்கள். அப்படி போட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

ஏதோ ஒரு வகையில் மதிமுக வேறு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது என்பதை முதலமைச்சர் யூகித்து இருக்கிறார். உளவுத்துறை மூலம் முதலமைச்சருக்கு தகவல் போய் சேர்ந்திருக்கிறது. அதன் காரணமாக தான் மதிமுகவை சேர்ந்த முன்னாள் வேட்பாளர் முத்துரத்தினத்தை திமுகவில் சேர்த்துள்ளார். கூட்டணி விஷயத்தில் மிகவும் உறுதியாக இருந்தவர் முதலமைச்சர். மதிமுகவில் இருந்து பலர் திமுகவில் சேர முயற்சித்த போதும் முதலமைச்சர் அனுமதிக்கவில்லை. அப்படி இருந்த முதலமைச்சர் தற்போது இந்த நிலைப்பாட்டை எடுக்கிறார். இந்த மாற்றத்திற்கு காரணம் மதிமுகவும், துரை வைகோவும் தான்.

மாநிலங்களவை இடம் தருவதாக தேர்தல் ஒப்பந்தத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் இடம் தருவதாக சொன்னார்கள் என்று துரை வைகோ சொல்கிறார். ஜனவரி மாதம் செய்தியாளர் சந்திப்பின்போது கூட வைகோ, மாநிலங்களவை தேர்தல் குறித்து பேசவில்லை என்று சொல்கிறார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, எங்களுக்கு ராஜ்யசபா இடம் தருவதாக திமுக மூத்த நிர்வாகி வாக்குறுதி கொடுத்தார் என்று சொல்கிறார். யார் அந்த மூத்த நிர்வாகி? அப்போது திமுக வாக்குறுதி கொடுத்துவிட்டு நிறைவேற்றவில்லை என்று தவறான தகவலை பரப்புகிறார். திமுகவில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட இடங்களை, அவர்களுக்கே ஒதுக்கும் மரபு பின்பற்றப்படுகிறது. காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைந்த பிறகு அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அந்த இடத்தை கொடுத்தது. திமுக கூட்டணி கட்சிகளை மதித்தே நடந்து வந்துள்ளது. இதில் மாற்றம் நிகழும் என்றால் அதற்கு மதிமுக தான் காரணம்.

eps

இதுவரை அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் என்று பாஜக எங்கும் சொல்லவில்லை. என்.டி.ஏ தலைமையில் தான் ஆட்சி என்றுதான் சொல்லி வருகிறது. இதில் புதிய திருப்பமாக எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லிவந்த அமித்ஷா, அதிமுகவில் இருந்து ஒருவர்தான் முதலமைச்சர் என்று சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றபோதே தனது மகனையும், சம்பந்தியையும் காப்பாற்றுவதற்கு எல்லாவற்றும் நிபந்தனை அற்ற ஆதரவு தருகிறேன் என்று சொல்லிவிட்டுதான் எடப்பாடி வந்தார். இல்லாவிட்டால் அவர் பேசாமல் இருக்க மாட்டார். நீங்கள் அதிமுகவை கபளிகரம் செய்வதற்கு பாஜக தயாராகிவிட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமியையு தின்று செரிக்க பாஜக தயாராகி விட்டது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ