spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅவசரப்பட்ட ராமதாஸ்! அமித்ஷா திட்டம் படுதோல்வி! இரண்டாக உடையும் பாமக!

அவசரப்பட்ட ராமதாஸ்! அமித்ஷா திட்டம் படுதோல்வி! இரண்டாக உடையும் பாமக!

-

- Advertisement -

அன்புமணி கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக ராமதாஸ் நீதிமன்றத்தை நாடுவார் என்றும், எனவே இரு தரப்புக்கும் இடையிலான மோதல் தொடரவே செய்யும் என்று தான் நினைப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அன்புமணி பாமக பொதுக்குழுவை நடத்தி முடித்துள்ள நலையில், மருத்துவர் ராமதாசின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பிரபல யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பாமக யாருக்கு சொந்தம் என்று இதுவரை பொதுவெளியில் நடைபெற்று வந்த பிரச்சினை தற்போது நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது. நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இருவரையும் சமரசம் செய்ய மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை. மேலும் அன்புமணி பொதுக்குழு கூட்டம் நடத்த அவர் தடை விதிக்கவில்லை. பாமகவின் சட்டவிதிகளின் படி கடந்த மே மாதத்துடன் அன்புமணியின் பதவிக்காலம் முடிந்திருந்தாலும், அடுத்த ஏற்பாடு செய்யப்படும் வரை அவர் பதவியில் தொடரலாம். அன்புமணிக்கு பொதுக்குழுவை கூட்டவும் அதிகாரம் உள்ளது. பாமக நிறுவனரை அழைக்கலாம். அவர் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடக்கலாம். அவர் வழிகாட்டியாக இருக்கலாமே தவிர, முடிவு எடுக்கும் உரிமை அவருக்கு கிடையாது. இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அன்புமணிக்குதான் இருக்கிறது.  பொதுக்குழு கூட்டம் சட்டப்பூர்வமாக நடைபெறவில்லை என்பது மருத்துவர் ராமதாசின் வாதமாகும். எனவே இந்த விவகாரத்தில் சட்டப்போராட்டம் இன்னும் முடியவில்லை.

மருத்துவர் ராமதாஸ், அடுத்தபடியாக உயர்நீதிமன்றத்தில் உள்ள சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தை நாடுவார். கட்சி யாருக்கு சொந்தம் என்கிற விதமாக இந்த விவகாரம் போய்விடும். பாமக அங்கீகாரத்தை இழந்துவிட்டதால், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடுமா? என்பது சந்தேகம். சிவில் நீதிமன்றம் மூலமாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அப்போது,  சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அது முடிவதற்கு வெகு காலமாகிவிடும். அடுத்து  சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதால், அதற்குள்ளாக பாமக ஒன்றுபட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் கட்சியினர் பிரிந்து இருந்தால் தேர்தலில் பின்னடைவை சந்திக்க நேரிடும். பாமகவின் பொதுக்குழுவை நடத்தியது அன்புமணிக்கு வெற்றியாக இருக்கலாம். ஆனால் தொண்டர்கள் கட்சியை ஒன்று படுத்திவிட்டு பொதுக்குழுவை நடத்தி இருக்கலாம் என்கிற  ஆதங்கம் உள்ளது. சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்று விட்டதாக அன்புமணி நினைக்கலாம். ஆனால் உண்மையில் தொண்டர்களுக்கு இது தோல்விதான்.

பாமக பொதுக்குழுவில் அன்புமணிக்கு ஒரு வருட காலம் பதவி நீட்டிப்பு வழங்கி, தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இது அன்புமணி செய்த நல்ல விஷயமாக பார்க்கிறேன். அவரை அடுத்த தலைவராக தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும், அவர் ஓராண்டுக்கு பதவிக்காலத்தை மட்டும் நீட்டித்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் மருத்துவர் ராமதாஸ் உடன் சமசரம் செய்வதற்கான வாய்ப்புகளை அன்புமணி திறந்துவைத்துள்ளார். பாமகவை வழிநடத்தும் தலைமைப் பண்பை மருத்துவர் ராமதாஸ் இழந்துவிட்டதாக அன்புமணி சொல்கிறார். தந்தை – மகன் இருவருக்கும் இடையே நடைபெறுவது யார் பெரியவர் என்கிற பிரச்சினையாகும். அவர்களுக்கு இடையே உள்ள பிரச்சினையை தீர்க்கும் வகையிலான தலைவர் பாமகவில் இல்லை. இந்நிலையில், ராமதாசுக்கு கட்சியை வழிநடத்தும் பண்பு இல்லை என்று அன்புமணி சொல்வது ஏற்புடையது கிடையாது. ராமதாசுக்கு எதோ ஒரு அழுத்தம் தரப்படுகிறது என்று நினைக்கிறேன். அந்த அழுத்தம் காரணமாக அவருக்கு குழப்பம் ஏற்படுகிறது. அதை தாண்டி அவர் செயல்பட்டால், அன்புமணியுடன் சமரசத்திற்கு செல்ல வாய்ப்புகள் உள்ளன. அதை அவர் செய்ய வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

பாமகவில் கூட்டணி பேசுவதில் தந்தை – மகன் இடையே பிரச்சினை இல்லை. கூட்டணி விவகாரங்களை நான் தான் கவனிக்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் நினைக்கிறார். அப்படி நினைப்பவர் 2022ஆம் ஆண்டில் அன்புமணியை தலைவராக ஆக்கி இருக்கக்கூடாது. கடைசி வரை தானே தலைவராக தொடர்வேன் என்று அறிவித்து இருக்க வேண்டும். பாமக பிரிந்து கிடக்கும் நிலையில், இவர்கள் எந்த அணிக்கு சென்றாலும் பேரம் பேசும் வலிமையை இழந்துவிடுவார்கள். ராமதாஸ் கட்சியை வளர்த்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டார். அப்படி இருக்கும்போது மீண்டும் குறுக்கே வரக்கூடாது. இந்த விவகாரம் தேர்தல் ஆணையம் வரை சென்றால் பாமகவுக்கு தான் இழப்பு. மேலும் அவர்கள் செல்கிற கூட்டணிக்கும் அதனால் எந்த பயனும் அளிக்காது. ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் என்பது தொடரும் என்று தான் நினைக்கிறேன். பொதுக்குழுவை எதிர்த்து ராமதாஸ் நீதிமன்றத்திற்கு சென்றார் என்றால் அதற்கு தீர்வே கிடைக்காது. அதேவேளையில் பாஜக எப்படியும் பாமகவை ஒருங்கிணைத்துவிடுவார்கள். நீதிமன்றத்திற்கு உள்ளே ஒரு முயற்சி செய்தார்கள். நீதிமன்றத்திற்கு வெளியேயும் முயற்சி  செய்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்

MUST READ