spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஎடப்பாடிக்கு பதில் எஸ்.பி.வேலுமணி முதல்வர்?  ஆர்.எஸ்.எஸ். போடும் திட்டம்!  உடைத்துப் பேசும் பத்திரிகையாளர் மணி!

எடப்பாடிக்கு பதில் எஸ்.பி.வேலுமணி முதல்வர்?  ஆர்.எஸ்.எஸ். போடும் திட்டம்!  உடைத்துப் பேசும் பத்திரிகையாளர் மணி!

-

- Advertisement -

அதிமுகவை, பாஜக கபளீகரம் செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தனது செய்தியாளர் சந்திப்பின் மூலம் அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பாஜகவின் கூட்டணி ஆட்சி கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளது குறித்தும், அமித்ஷா குறிப்பிட்ட முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் மணி பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இது பாஜகவுக்கு அவர் அளித்திருக்கும் பதில் ஆகும். கூட்டணி ஆட்சி கிடையாது. அதிமுக ஆட்சிதான் நடைபெறும் என்றும், அதிமுக தனிப்  பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று கூறுவதன் மூலம் நாங்கள் கூடுதலான இடங்களில் போட்டியிடுவோம் என்று சொல்கிறார். தனிப் பெரும்பான்மைக்கு 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதற்கு குறைந்தபட்சம் 140 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும். அப்போது பாஜகவினர் 80 இடங்கள் கேட்டால் அவர்களுக்கு அவ்வளவு தொகுதிகள் தர முடியாது. கடந்த முறை பாஜக 20 தொகுதிகளை வாங்கியது. தற்போது அதில் 5 – 10 இடங்கள் கூடுதலாக தரலாம். தொகுதி பேரம் பேசுவதிலும் கடினமாக இருக்கும். இஷ்டம் போன்று வளைக்க முடியாது. அதைதான் அவர் தெளிவாக எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். அமித்ஷா தொடர்ச்சியாக கூட்டணி ஆட்சி சொல்லி வந்த நிலையில், அதற்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விரும்பியுள்ளார். கூட்டணிக்குள் அதிமுக வந்துவிட்ட நிலையில், அவ்வளவு சுலபமாக அவர்களை பாஜக மிரட்ட முடியுமா? என்கிற சந்தேகம் ஏற்பட தொடங்கியுள்ளது.

அதிமுக கூட்டணியில் தற்போதைய சூழலில் இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக இருக்கிறது. அப்படி உள்ள நிலையில், அதிமுகவுக்கான இடங்களை 25 முதல் 30 இடங்களாக சுருக்க முடியுமா? என கேள்வி எழுகிறது. ஆனால் அதற்கான வேலைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் காரணமாக பேரம் பேசுகிற இடத்தை பாமக இழந்துவிட்டது. ஆனால் பாஜக அதிமுகவின் கழுத்தை நெரித்து 50 இடங்களுக்கு வாங்க முடியுமா? என்றால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்ள மாட்டார். கூட்டணியில் பாஜகவின் கை ஓங்குவது போல அமித்ஷா, ஊடகங்களில் தொடர்ந்து கட்டமைத்து வருகிறார். எடப்பாடியிடம் அதிக சீட்டுகள் வேண்டும் என்று கேட்டால் கூட்டணி உடைந்து விடும். அதிமுக தனிப் பெரும்பான்மை என்கிற கொள்கையை வைத்திருக்கும் போது, பாஜகவுக்கு 60 இடங்களை கொடுத்தால், மற்ற கட்சிகளுக்கு இடங்களை தர முடியாது. எனவே அது சாத்தியப்படாது. எனது கணிப்பின்படி பாஜக எண்ணம் நிறைய இடங்களில் போட்டியிடுவது கிடையாது. அவர்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதுதான். பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில்  வெற்றி பெற்றால் கூட ஒரு அமைச்சர் பொறுப்பு கிடைத்தால் அது லாபமாகும்.  தமிழக அரசியல் வரலாற்றில் அது முதல் புள்ளியாகும்.

கடந்த முறை சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 20 இடங்கள் தரப்பட்ட நிலையில், இம்முறை 30 இடங்கள் வரை வழங்கப்படலாம். ஆனால் ஆட்சியில் பங்கு வேண்டும். அது பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியாகும். முதலில் விஜய் உடன் எடப்பாடி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியபோது, விஜய் 60 – 80 தொகுதிகள், துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது அதிமுக தரப்பில் 40 சீட்டுகளும், அதிகாரத்தில் பங்கு தருவதற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. 4 அமைச்சர் பொறுப்புகள் வரை தர சம்மதம் தெரிவித்தனர். அதற்கு காரணம் அவர்களால் அதிமுக ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் பாஜகவுக்கு அமைச்சரவையில் ஒரு இடம் கொடுத்தால் கூட, அவர்கள் மொத்தமாக கட்சியை விழுங்கி விடுவார்கள் என்கிற பயம் உள்ளது. விஜய் – எடப்பாடி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அறிந்ததால் தான் அமித்ஷா அவசர அவசரமாக வந்து அதிமுக உடன் கூட்டணியை உறுதி செய்தார்.

துப்பாக்கியை தொடர்ந்து விஜயின் 50வது பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ ரிலீஸாகும் போக்கிரி!

அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளிகரம் செய்துவிட முடியாது என்று எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். காரணம் அதிமுகவை கபளிகரம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு தான் இருக்கிறது. கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் 2 முறை பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் உடன் கூட்டணி வைத்தது கிடையாது. ஆனால் எடப்பாடி அதிமுகவின் துயரம் என்ன என்றால் அவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் உள்ளனர். முருக பக்தர்கள மாநாட்டிற்கு மறுநாள் எஸ்.பி.வேலுமணி, மோகன் பகவத்துக்கு வேலை கொடுக்கிறார். அப்போது ஆர்எஸ்எஸ் – மோகன் பகவத்தின் ஆசிர்வாதம் வேலுமணிக்கு இருக்கிறது. அமித்ஷா தன்னுடைய பேட்டியில் அதிமுகவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஆவார் என்று சொல்கிறார். ஒருவேளை எடப்பாடி பிரச்சினை செய்தார் என்றால், வேலுமணி எங்களுக்கு இருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் செங்கோல் கமிட்டியில் வேலுமணியின் சகோதரர் இடம்பெற்றுள்ளார். அவர் பாஜககாரர் கிடையாது. இருப்பினும் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளார். அப்போது இந்த புள்ளிகளை எல்லாம் இணைத்து பார்த்தோம் என்றால் பாஜக, அதிமுகவை விழுங்கும் என்பதற்கான நியாயமான காரணங்களை புரிந்துகொள்ள முடியும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முதல் சித்தாந்த எதிரி கம்யூனிஸ்ட்டுகள் தான். அவர்கள் சத்தீஸ்கரிலும், ஜார்கண்டிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை நக்சல்களை கொன்றுள்ளனர். இது தொடர்பாக 5 இடதுசாரி தலைவர்கள் மட்டும் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஏனென்றால் நக்சலிசத்திற்கு எதிராக ஆயுதப்படைகள் மூலம் தீர்வு காண முடியும் என்று மத்திய அரசு நினைக்கிறது. ஆர்எஸ்எஸ் – பாஜகவை மக்கள் 100 சதவீதம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு சதவீதம் ஏற்றுக் கொண்டாலே போதும். அவர்கள் சாதித்துவிடுவார்கள். ஏனென்றால் அது ஒரு சித்தாந்தம். ஒன்று இரண்டு தேர்தல் வெற்றியால் அதை வீழ்த்தி விட முடியாது.  அதிமுக – பாஜக கட்சிகள், திமுக எதிர்ப்பு என்கிற புள்ளியில் ஒன்றிணைகிறார்கள். திமுக அதிகாரத்தில் உள்ள போது பாஜக உடன் கைகோர்ப்பதில் அதிமுக தொண்டர்களுக்கு பெரிய அளவில் வருத்தம் இருக்காது. தன்னுடைய எதிரி திமுக தான், பாஜக கிடையாது என்று அதிமுக தொண்டர்கள் மனதில் தெளிவாக உள்ளது. நாட்கள் போக போக அரசுக்கு எதிரான மனநிலை அதிகரிக்கும்போது, அதிமுக தொண்டர்களின் பாஜக எதிர்ப்பு என்பது மழுங்கிதான் போகும். அவர்கள் பாஜக செய்வதை சகித்துக் கொள்வதற்கு பழகி விடுவார்கள். மறுடியும் சொல்கிறேன் தேர்தல் வெற்றிகளால் பாஜகவை வீழ்த்த முடியாது. எத்தனை முறை தோற்கடித்தாலும் அது மேலே வரும். ஏனென்றால் அது ஒரு வைரஸ், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ