spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபீகார் தேர்தல் மேடையில் ஒலித்த ஸ்டாலின் பெயர்! பதறியடித்து ஓடிய மோடி! திருப்பியடித்த தமிழ்நாடு!

பீகார் தேர்தல் மேடையில் ஒலித்த ஸ்டாலின் பெயர்! பதறியடித்து ஓடிய மோடி! திருப்பியடித்த தமிழ்நாடு!

-

- Advertisement -

பீகாரில் நிலவும் ஊழல், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார் என்று அரசியல் விமர்சகர் அகிலன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பீகார் தேர்தல் நிலவரம் குறித்து அரசியல் விமர்சகர் அகிலன் கார்த்திகேயன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பீகாரில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக நிதிஷ்குமார் முதலமைச்சராக இருக்கிறார். இந்த கால கட்டத்தில் பீகார் வளர்ச்சி அடைந்துவிட்டதா என்று பார்த்தால், அப்படி எதுவும் இல்லை. ஓரளவுக்கு சிறிய சிறிய மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. மதுவிலக்கு திட்டத்தை அறிவித்தது அவருக்கு கை கொடுத்தது. பெண்கள் மத்தியில் நிதிஷ்குமாருக்கு செல்வாக்கு இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களாக அந்த செல்வாக்கு குறைந்து வருகிறது. 2024 தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியில் இருந்து விலகி ஆர்ஜேடி கூட்டணிக்கு சென்றார். பின்னர் மீண்டும் பாஜகவுக்கு திரும்பினார். இதனால் அவருடைய நம்பகத்தன்மை குறைகிறது. மேலும்,  அவரது உடல்நிலையும் மோசமடைந்து வருவதை அறிய முடிகிறது. அவருடைய செயல்பாடுகள் காரணமாக நிதிஷ்குமாரை முதலமைச்சராக அறிவிக்க முடியுமா? என்று பாஜகவில் குழப்பம் நிலவுகிறது. மறுபுறம் நிதிஷ்குமார் முதல்வர் வேட்பாளர் இல்லை என்றும் அவர்களால் அறிவிக்க முடியாது. அப்படி செய்தால் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் இழந்துவிடுவார்கள்.

பீகாரில் கடந்த ஆண்டு ரூ.70 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக சொல்லப்படுகிற நிலையில், அதற்கான கணக்குகள் இல்லை என்று சிஏஜி சொல்கிறார். மேலும், இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. இந்த பிரச்சினைகளில் இருந்து பொதுமக்களை திசை திருப்புவதற்காக பெண் வாக்காளர்களை கவரும் வகையில் ரூ.10,000 தொழில் முனைவோர் ஆக்கும் திட்டத்தின் கீழ் வழங்கினார்கள். தற்போது தேர்தல் அறிக்கையில் ஒரு லட்சம் பெண்களை லட்சாதிபதிகள் ஆக்குவோம் என்று சொல்கிறார்கள். ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதாகவும் சொல்கிறார்கள். அப்போது நிதிஷ்குமாரின் இத்தனை ஆண்டு கால ஆட்சியில் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள்? பாஜக – ஜேடியுவின் வாக்குறுதிகள் போலியானவை என்று மக்கள் மத்தியில் எண்ணம் ஏற்பட்டுள்ளது. இது ஆர்.ஜே.டி – காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. எனவே இம்முறை மக்கள் தேஜஸ்வி – ராகுல்காந்தியின் கூட்டணிக்கு வாக்களிக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பீகாரில் முதலமைச்சர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்கிற கேள்விக்கு கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் தேஜஸ்வி யாதவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேவேளையில் நிதிஷ்குமாருக்கு 18 சதவீதம் பேர் தான் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த சரிவு ஜேடியு – பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதை திசை திருப்புவதற்காக தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று அச்ச உணர்வை ஏற்படுத்தினால், தமிழ்நாட்டிற்கு எதிரான மனநிலை புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்தினரிடம் ஏற்படுத்தலாம் என மோடி நினைக்கிறார். அதனுடைய ஒரு பகுதிதான் இந்த பேச்சு ஆகும். ஒடிசாவில் இதேபோல் பி.கே.பாண்டியனை கையில் எடுத்து, தமிழர்கள் திருடர்கள் என்கிற சித்தரிப்பை ஏற்படுத்தினார்கள். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் கபே என்கிற இடத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு ஷோபனா கரந்தலாஜே என்கிற பாஜக அமைச்சர் தமிழர்கள் மீது குற்றம்சாட்டினார்.

பாஜகவின் நோக்கம் என்பது பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அங்குள்ள பாஜக மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மத்தியில் பாஜக மைனாரிட்டி அரசாக உள்ளதால், அவர்கள் நினைக்கும் திட்டங்களை கொண்டுவர முடியவில்லை. மக்களவையில் நிதிஷ், சந்திரபாபு நாயுடுவின் ஆதரவில் பெரும்பான்மை கிடைக்கிறது. அதேநேரத்தில் மாநிலங்களவையிலும் பெரும்பான்மை பெற வேண்டும். எனவே ஆர்.ஜே.டி – காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை குறைக்க முடிந்தது என்றால், அங்கிருந்து வரும் பாஜக எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். அதன் காரணமாக மாநிலங்களவையில் பாஜகவின் வலிமை அதிகரிக்கும். எனவே தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோற்றாலும் அவர்களுக்கு கவலை இல்லை. அவர்களின் நோக்கம் என்பது முதலில் அதிமுகவை அழித்துவிட்டு, அந்த இடத்திற்கு வர வேண்டும் என்பதுதான். எனவே பீகார் மக்களை திசை திருப்ப மோடி சிறிய முயற்சி மேற்கொண்டிருக்கிறார். அது பெரிய அளவில் எடுபடாது என்றே நினைக்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ