எப்ஸ்டின் ஃபைல்ஸ் வெளியாகி உள்ள நிலையில், இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் பாஜக அமைச்சருக்கும் தொடர்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகவியலாளர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில் எப்ஸ்டின் பைல்ஸ் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து ஊடகவியலாளர் சத்தியராஜ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- எப்ஸ்டின் ஃபைல்ஸ் என்பது அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய பைனான்சியர் ஆவார். எப்ஸ்டின் மற்றும் அவரது மனைவி ஆகியோர் குறித்த ரகசியமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. ட்ரம்பின் நெருங்கிய நண்பர் எப்ஸ்டின். 2008ஆம் ஆண்டில் சிறு குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் எப்ஸ்டின் கைதாகினார். 2019ஆம் ஆண்டு சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்தார். பிரச்சினைகளின் தொடக்கப்புள்ளி 2005-ல் 14 வயது பள்ளி மாணவியை, எப்ஸ்டின் தன்னுடைய ரெசார்ட்டில் வைத்து தவறாக நடந்துகொள்ள முயற்சித்தார். இது குறித்து அந்த மாணவி தனது தந்தையிடம் சொல்ல, அவர் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் பாம்பீச் ஹவுஸ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த பெண்ணிடம் விசாரித்த போது அவர்கள் தங்களுடைய நண்பர்கள் சொல்லி வந்ததாக கூறுகிறார்கள். கடந்த 2005 அக்டோபரில் நிறைய பெண் குழந்தைகளின் போன் நம்பர்கள் அடங்கிய டைரிகள் கிடைக்கிறது.

அந்த டைரிகளில் உள்ள தகவல்களை விசாரிக்க தொடங்கியபோது, எப்ஸ்டின் பீச் ரிசார்ட்டில் பணிபுரிந்த மசாஜ் செய்த முக்கியமான பெண் ஒருவர், தாய்லாந்துக்கு சென்று அங்கு ஆஸ்திரேலியரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவருடைய தொடர்பு எண்களை கண்டுபிடித்து எப்படி அவர் தாய்லாந்துக்கு சென்றார் என்று எப்.பி.ஐ அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, எப்ஸ்டின் 2000 முதல் 2002 வரை தன்னை உலகில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு கட்டாயப்படுத்தி விருந்தாக்கியதாகவும், அவர்களில் பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ருவும் ஒருவர் என்றும் தெரிவித்தார். தற்போதும் அந்த பெண் ஆஸ்திரேலியாவில் உள்ளார். அதேபோல் அந்த பாம் பீச் ஹவுசில் இருந்த சமையலரும் இது தொடர்பான தகவல்களை சொல்ல 2005-ல் பிரச்சினை பூதாகரமாகியது. வழக்கின் விசாரணை பின்னர் தீவிரமடைந்து, 2008ல் எப்ஸ்டின் கைதாகினார். பின்னர் சிறையில் தற்கொலை கொண்டார். இந்த சூழலில் எப்ஸ்டின் பீச் ஹவுசில் பணிபுரிந்த பெண், அதற்கு முன்பாக அமெரிக்க அதிபர் டிரம்பின் மாரா லோகோ என்கிற மிகப்பெரிய பங்களாவில் பணிபுரிந்தார். பின்னர் அந்த பங்களாவை கிளப் ஆக டிரம்ப் மாற்றினார். இந்த நிலையில், அந்த பெண்ணும், டிரம்பும் ஒன்றாக இருப்பது குறித்த இ-மெயில் அண்மையில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

எப்ஸ்டின் பைல்ஸ் தொடர்பாக கடந்த ஆண்டு ஜுலை மாதம் வால்ஸ்ட்ரீட் இதழில் ஒரு கட்டுரை வெளியாகியது. கடந்த 2003 ஜனவரியில் எப்ஸ்டினின் 50-வது பிறந்தநாளை ஒட்டி டிரம்ப் ஒரு பெரிய வாழ்த்து அட்டையை அனுப்பினார். அந்த வாழ்த்து அட்டையில் உலகில் உள்ள முக்கிய தலைவர்கள், அமெரிக்காவில் உள்ள முக்கிய தலைவர்கள், பிரிட்டன் இளவரசர் பிரின்ஸ் போன்றவர்களின் கையெழுத்து தொகுக்கப்பட்டுள்ளது. அதில் நிறைய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. அந்த வாழ்த்து அட்டையில் குழந்தைகளையும், பெண்களையும் பாலியல் ரீதியாக எப்படி பயன்படுத்துவது என்ற குறிப்புகள் இடம்பெற்று இருந்தன. மூன்று தொகுதிகள் கொண்ட இந்த கிரீட்டிங் கார்டு வெளிவராமலேயே இருந்தது. 2025ல் வால்ஸ்ட்ரீட் கட்டுரையில் தான் இந்த விஷயம் வெளியானது. இதனால் அவர்களுக்கு எதிராக 10 பில்லியன் டாலர் மானநஷ்ட கோரி வழக்கு தொடுத்தார் அதிபர் டிரம்ப். 2025 ஜுலை 25-ல் மீண்டும் வால்ஸ்ட்ரீட்டில் வெளியான கட்டுரையில் பில் கிளிண்டன் உள்ளிட்டோரை குறிப்பிட்டிருந்தது. அதன் பின்னர் செப்டம்பரில் முழுமையான புத்தகமும் இணையத்தில் வெளியாகியது.

இந்த நிலையில், 2026 ஜனவரி 20 எப்ஸ்டினின் பிறந்த நாள் அன்று, அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வலர்கள் அந்த புத்தகத்தில் உள்ள வாழ்த்து அட்டையை 10 அடிக்கு பெரிய சிலை மாதிரி செய்து பொதுவெளியில் வைத்தனர். இதன் மூலம் எப்ஸ்டினுக்கும், டிரம்புக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 1990களில் இருந்து 2005 வரை டிரம்ப் எப்ஸ்டினுடன் தொடர்பில் இருந்தார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமெரிக்கா போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு நாட்டில் எப்படி அரசியல் லாபத்திற்காக, பணத்திற்காக பள்ளி குழந்தைகள் தவறாக பயன்படுத்தப்பட்டார்கள் என்று ஆணவங்கள் உள்ளது. அது அமெரிக்க மட்டுமின்றி இந்தியாவை சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவர் எப்ஸ்டினுடன் நெருக்கமாக இருந்ததற்கான ஆதாரங்களும் வெளியாகியுள்ளது. இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ் போன்று உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்களுக்கு, பெண் குழந்தைகளை பாலியல் இச்சைகளுக்கு எப்ஸ்டின் சப்ளை செய்துள்ளனர். டிரம்ப் தரப்பில் தங்களுடைய மாரோ லோகோ கிளப்பில் உள்ளவரின் பெண் குழந்தையை எப்ஸ்டின் தவறாக பயன்படுத்தினார். அதன் பிறகு அவரை தங்களுடைய கிளப்பில் இருந்து நீக்கிவிட்டோம் என்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதுமட்டுமின்றி 1984ல் டிரம்பின் காரில் டிரம்ப் மற்றும் எப்ஸ்டின் ஆகியோர் ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பின்னர் அந்த சிறுமி மர்மமான முறையில் இறந்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. டிரம்பின் 3வது மனைவியான மெலனியாவும், எப்ஸ்டினின் மனைவியும் இந்த விவகாரத்தில் டிரம்புக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வெளிப்படுத்தி இருந்தனர். இவர்கள் இருவரும் யூகஸ்லேவியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருக்கும் நெருக்கமான உறவு இருந்துள்ளது. மெலானியா 2000-க்கு பிறகு தான் அமெரிக்காவுக்கு வந்தார். எனவே அவரையும் சிறு வயதில் டிரம்ப் தவறாக பயன்படுத்தினாரா? என்ற கேள்வி எழுகிறது. 1998ல் டிரம்புக்கு மெலனியாவை அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், அப்படி அறிமுகம் செய்தவர் யார்? என்பது போக போக தான் தெரியும். எப்ஸ்டின் பைல்ஸ் வெளியாகி பல புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி உள்ள நிலையில், கடந்த 3 நாட்களாக சர்வதேச ஊடகங்கள் தங்களுடைய நாடு சார்ந்த விஷயங்களை ஊடகங்களில் எழுதி வருகிறார்கள்.

குறிப்பாக இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி, எப்ஸ்டினுடன் வர்த்தகம் தொடர்பாக சில கடித போக்குவரத்துகளை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் தகவல்கள் வெளியாகிறபோது அவருடன் தொடர்பில் இருந்த இந்தியாவின் முக்கிய பணக்காரர்கள் யார்? என்ற விவரங்கள் தெரியும். பாஜகவை மையப்படுத்தி பேசுகிறபோது மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிதான் வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு வரை அவர் ஒரு ஐ.எப்.எஸ் அதிகாரியாக இருந்தார். வெளிநாடுகளில் இந்திய தூதராக பணிபுரிந்துள்ளார். அமெரிக்காவில் பணிபுரிந்த அவர், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவுக்கு வந்தார். தற்போது மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராக உள்ளார். இந்த நிலையில், மத்திய அமைச்சரான பிறகு, அமெரிக்காவில் உள்ள பிரபல பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஆதரவாக ஹர்தீப் சிங் பூரி ஏதேனும் செயல்பட்டிருக்கிறாரா? என்பது போக போக தான் தெரியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


