spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமலேசியாவில் நடந்த ரகசிய சந்திப்பு! ஓபிஎஸ் - ஸ்டாலின் சந்திப்பின் பின்னணி! உண்மையை உடைக்கும் தாமோதரன்...

மலேசியாவில் நடந்த ரகசிய சந்திப்பு! ஓபிஎஸ் – ஸ்டாலின் சந்திப்பின் பின்னணி! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

-

- Advertisement -

ஓ.பி.எஸ் குடும்பத்துடன் மலேசியாவுக்கு சென்றிருந்தபோது அங்கு முக்கியமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளதாகவும், இது பாஜகவுக்கு தெரிய வந்ததால் அவர்கள் ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் இருந்து வெளியேற்றியதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ஓபிஎஸ் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திபபின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- அதிமுகவில் டிடிவி தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்திற்காக ஓபிஎஸ்க்கு பெரியகுளத்தில் சீட் கொடுத்தார்கள்.  அவர் எம்எல்ஏ ஆகவும் ஆகினார். சசிகலா சொன்னார் என்பதற்காக அவருக்கு 3 முறை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்தார்கள். இந்நிலையில் ஓபிஎஸ் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் என்பதுதான் இன்றைக்கு மிகப்பெரிய செய்தியாகும். அதற்கு காரணம் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஓபிஎஸ், விஜய் உடன் கூட்டணிக்கு செல்லலாம் என பண்ருட்டி ராமச்சந்திரன் மூலம் அறிக்கை விட்டார். ஆனால் விஜய் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

விஜய்க்கு தன்னுடைய பலத்தை காட்டும் வகையில் ஓபிஎஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்று சந்தித்துள்ளார். ஓபிஎஸ் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர் ஆவார். அவர் சொல்லிதான் ராமநாதபுரத்தில் போட்டியிட்டார். தற்போது அண்ணாமலை சொல்லித்தான் ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க அனுமதி கோரி கடிதம் எழுதினார். ஓபிஎஸ் வெளி நாட்டிற்கு சென்றபோது பண விவகாரம் போன்று ஏதோ ஒரு முக்கிய விவகாரத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறார். இது பிரதமர் அலுவலகத்திற்கு தெரியவந்த நிலையில், பாஜக அவரை தள்ளிவைத்திருந்தனர்.

ஓபிஎஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது ஓபிஎஸ் வைத்த கோரிக்கை, கொடநாடு கொலை வழக்கு உள்ளிட்ட எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்குகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான். மற்றொருபுறம் பார்த்தோம் என்றால் திமுக கூட்டணியில் கட்சிகள் கூடிக்கொண்டே செல்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம்  தொலைபேசியில் உரையாடி உள்ளார். அவரும் உடல்நலம் விசாரித்ததாக சொல்கிறார். சசிகலா, முதலமைச்சர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்கிவிட்டு, எடப்பாடியை நியமிக்க வைத்து குற்றச்சாட்டு, அவர் ஸ்டாலினை பார்த்து சிரித்தார் என்பதுதான்.

ஓபிஎஸ் பிரபல கட்டுமான நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்துள்ளார். இந்த பணம் எல்லாம் போய்விடும் சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பாஜகவில் ஓபிஎஸ் செல்ல முடியாத வகையில் ஒரு லாக் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் ஓபிஎஸ்-ஐ நிராகரிக்கிறார்கள். இவர் கூட்டணியில் இருந்து வெளியில் வரவில்லை. அவர்கள் தான் இவரை நிராகரித்துள்ளனர். எனக்கு கிடைத்த தகவல்களின் படி ஓபிஎஸ், அவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மலேசியா, சிங்கப்பூர் சென்றுள்ளனர். அங்கு முக்கிய விஷயம் ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளது.

அண்ணாமலைக்கு ஒரு இலக்கு உள்ளது. அது அதிமுக தோல்வி அடைய வேண்டும் என்பதுதான். அதற்காக ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றவர்களை பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற்றினால் தென் மாவட்டங்களில் முக்குலத்தார் வாக்குகள் பாஜகவிற்கு வராது. அதனால் அந்த வேலையை வேகமாக செய்து கொண்டிருக்கிறார். தான் இல்லாவிட்டால் அதிமுக உடன் கூட்டணி வைத்தாலும், அந்த கூட்டணி வெற்றி பெறாது என்கிற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக அண்ணாமலை தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து வெளியே செல்பவர்களுக்கு தவெக ஒரு சிறந்த மாற்றுக்கட்சியாக உள்ளது. அதில் அன்வர்ராஜா, காளியம்மாள், மருது அழகுராஜ் போன்ற எத்தனையோ பேர் சேர முயற்சி செய்திருப்பார்கள். ஆனால் அங்கே ஜான் ஆரோக்கியராஜ், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோரை தாண்டி யாரும் விஜயை சந்திக்க முடியாது. விஜய் அவ்வளவு சீக்கிரம் யாரையும் சந்திக்கவோ, அவர்களிடம் பேசவே மாட்டார். ஓபிஎஸ், தவெக உடன் பலமுறை  கூட்டணிக்காக முயற்சி செய்துள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரன் வெளிப்படையாக அறிவித்துவிட்டார். ஆனால் தவெக தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

விஜய்க்கு என் முழு ஆதரவு உண்டு...... நெல்லையில் நடிகர் பிரபு பேட்டி!

விஜயினுடைய எதிர்பார்ப்பு என்பது எடப்பாடி பழனிசாமி, பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கிறார். இதற்காக விஜயின் அரசியல் வியூக அமைப்பாளர் ஜான் ஆரோக்கியம் திரைமறைவில் பணிகளை செய்துகொண்டிருக்கிறார். ஜான் ஆரோக்கியமும், சீமானும் மிகவும் நெருக்கமானவர்கள். அதேபோல் அன்புமணியிடமும் பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருக்கிறது. இதில் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவை தள்ளிவிட்டு வந்து விடுவார் என்பது போன்ற ஒரு வியூகத்தை ஜான் ஆரோக்கியசாமி சொல்லி வைத்திருக்கிறார். இந்த திட்டம் அனைத்தும் வரும் ஜனவரி மாதத்தில் தான் செயல்பாட்டிற்கு வரும்.

அதற்குள்ளாக ராமதாஸ், தேமுதிக, ஓபிஎஸ் போன்றவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்கள். தேமுதிக வருகிறது என்ற பயத்தில் வைகோ நானும் கூட்டணியில் இருக்கிறேன் என்று போய் முதலமைச்சரை சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துக்கட்சிகளும் திமுக கூட்டணியில் வந்துவிடும் போல. ஏனென்றால் அங்கே ஒரு சீட்டு வாங்கினாலும் அது எம்எல்ஏ பதவி. அதிமுக கூட்டணியில் 10 சீட்டுகள் வாங்கி ஒரு இடத்தில் வெற்றி பெறுவதற்கும், ஒரே ஒரு சீட் கொடுத்து அதில் எம்எல்ஏ ஆவதற்கும் வித்தியாசம் இல்லையா? திமுக கூட்டணியில் இம்முறை கமலுக்கு சீட் தர வேண்டும். ராமதாஸ் பிரிவு வந்தால் அவர்களுக்கு தர வேண்டும். அப்போது விசிகவை சமாதானப்படுத்தவும் வேண்டி வரும். மதிமுக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் உள்ளன.

வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளதால் தான் இங்கே எல்லோரும் கூட்டணிக்கு வருகிறார்கள். அப்படி அதிமுகவிடம் வெற்றிக்கான வாய்ப்புகள் இல்லாத சூழலில், அவர் ஓபிஎஸ்-யும் இழக்கிறார். அதேவேளையில் ஓபிஎஸ்க்கு ஆலோசனை குழு உறுப்பினர் பதவி தருவதற்கு எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் ஓபிஎஸ் பொருளாளர் பதவி வேண்டும் என்று கேட்கிறார். ஓபிஎஸ் மகன் ஒ.பி.ரவீந்திர நாத் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுகிறார். ஒருவேளை ஓபிஎஸ் திமுக கூட்டணிக்கு சென்றால், ஓ.பி.ரவீந்திரநாத் பாஜகவுக்கு சென்று விடுவார். அங்கே பாஜக கோட்டாவில் சீட்டு வாங்கி, அதிமுக கூட்டணியில் போட்டியிடுவார். அரசியல் ரீதியாக எந்தவிதமான கொள்கையோ, பார்வையோ இல்லாதவர் ஓபிஎஸ். தினகரனுக்கு எடுபுடி வேலை செய்து மேலே வந்தவர் அவ்வளவுதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ