spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசெங்கோட்டையன் நீக்கம் பின்னணி இதுதான்! பொறியில் சிக்கிய எடப்பாடி! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

செங்கோட்டையன் நீக்கம் பின்னணி இதுதான்! பொறியில் சிக்கிய எடப்பாடி! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

-

- Advertisement -

செங்கோட்டையன் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எப்படி நடந்துகொள்கிறார் என்பதை பொறுத்து கொங்கு மண்டலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையனை ஆதரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணி மற்றும் இதனால் கட்சியில் ஏற்பட போகும் பாதிப்புகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் நாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அதிமுகவில் அண்ணாவும் இருக்கிறது. திராவிடமும் இருக்கிறது. அப்படி இருந்தபோதும் எம்ஜிஆர் காலம் முதலே அந்த கட்சியை ஒரு சுயமரியாதை இல்லாத கட்சியாக வடிவமைக்கிறார்கள். எம்ஜிஆர் காலத்தில் அவர்தான் ஒன் மேன் ஆர்மி. அதற்கு செங்கோட்டையனே ஆதாரம் சொல்கிறார். கோபி தொகுதிக்கு பதிலாக சத்தியமங்கலத்தில் போட்டியிடுமாறு தன்னிடம் எம்ஜிஆர் சொன்னதாகவும், தன்னுடைய பெயரை சொன்னால் மக்கள் வாக்களிப்பார்கள என்று அவர் கூறியதாகவும் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி தனி மனித வழிபாட்டை நம்பியே அதிமுக உருவாக்கப் பட்டது. அப்படிதான் அது வாக்குகளை  பெற்றது. எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ தனக்கு கீழே இருக்கிற கட்சியை ஒரு அடிமைக் கூட்டமாகவே வளர்த்து எடுத்தார்கள். செங்கோட்டையன் தன்னுடைய பேட்டியில், தன்னையும் ஜெயலலிதா நீக்கிவிட்டு பின்னர் சேர்த்து உள்ளதாகவும், 2009ஆம் ஆண்டில் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் நீக்கப்பட்டு உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இரட்டை இலை சின்னம், அதிமுக என்கிற பாரம்பரியம் இருப்பதால் ஏதோ மக்கள் வாக்களிக்கிறார்கள். அந்த வாக்குகளை எப்படி கைப்பற்றுவது என்பதில் பாஜக மும்மரமாக இருக்கிறது. அதற்காக பல வழிகளில் முயற்சிகளை செய்து வருகிறது. மகாராஷ்டிராவிலோ, மற்ற மாநிலங்களில் செய்த முயற்சிகளை இங்கேயும் செய்கிறது. பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு துக்ளக் குருமூர்த்தி அளித்த நேர்காணலில், ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பை சேர்த்து வைத்தது நான் என்று சொல்கிறார். கூவத்தூரில் நடைபெற்ற முதலமைச்சர் பதவிக்கான ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுத்து, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனதாக வரும் தகவல்கள் உண்மைதான். ஒவ்வொரு எம்எல்ஏக்களுக்கும் இவ்வளவு கோடிகளை கொட்டிக் கொடுப்பேன் என்று சொல்லிதான், சசிகலாவால் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

தலா 4 ஆண்டுகள் முதல்வராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார். இந்த ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி கட்சியை தன் பிடியில் வைத்திருப்பதிலும், அவரே ஒற்றைத் தலைமை என்று நிருவுதிலும் வெற்றி பெற்றுவிட்டடார். ஒபிஎஸ்,டிடிவி, செங்கோட்டையன் போன்றவர்களை மீறி அதை செய்ய வைத்துள்ளார். அண்ணாமலையின், வாயாலேயே தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்ல வைத்துவிட்டார். அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பு தாமதமானதற்கு காரணம் டிடிவி, ஓபிஎஸ் போன்றவர்களை கட்சிக்குள் விடமாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக நின்றதுதான்.

அதிமுக ஒருங்கிணைப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முரண்டு பிடிக்கிறார். மற்றொருபுறம் விஜய் வாக்குகளை பிரிக்க பார்க்கிறார். இப்படியான சூழலில் தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றவர்கள் வெளியே இருந்தால், அதன் காரணமாக தென் மாவட்டங்களில் என்.டி.ஏ கூட்டணி கணிசமான வாக்குகளை இலக்க நேரிடும் என்று பாஜக அச்சப்படுகிறது.  திமுக, அதிமுக, விஜய் மற்றும் சீமான் என நான்கு முனை போட்டி உள்ள நிலையில், அதில் அதிமுக பலவீனமாக இருந்தால் நமக்கு பிரச்சினை என்று பாஜக நினைக்கிறது. எனவே அதிமுகவின் அனைத்து தரப்பு வாக்குகளையும் ஒன்றிணைக்க எடப்பபாடி பழனிசாமியை எப்படியாவது வழிக்கு கொண்டுவர வேண்டும் செங்கோட்டையனை களத்தில் இறக்கியுள்ளனர்.

அதற்கு காரணம் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த எப்பாடிக்கு, அதே சமுதாயத்தை சேர்ந்த செங்கோட்டையனை வைத்து பதிலடி கொடுக்கலாம் என்பதுதான். கடந்த காலங்களில் அதிமுகவில் இருந்து விலகிப் போனவர்களை, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களே சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கிறபோது ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களை எடப்பாடி பழனிசாமி அரவணைத்துப் போவது என்ன தவறு என்று செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு 10 நாள் கெடுவும் விதித்துள்ளார்.

2026 தேர்தலை பாஜகவும், அமித்ஷாவும் ஒரு முக்கியமான தேர்தலாக பார்ப்பதாகவும், எப்படியாவது திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று அவர்கள் முனைப்போடு இருக்கிறார்கள் என்றும் குருமூர்த்தி தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார். பாஜகவை நம்பியிருந்த ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களை கைவிட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த குருமூர்த்தி, அதிமுக ஒன்றாக இருப்பது நல்லது என்று நாம் சொல்கிறோம், எடப்பாடி பழனிசாமி இது குறித்து யோசிப்பாரா என்பது எதிர்காலத்தில் தெரியவரும் என்று சமாளித்தார்.

எடப்பாடியை பொறுத்த வரை கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் நோக்கம் என்பது, சட்டமன்றத் தேர்தலில் வென்று அவர் முதல்வராக வேண்டும் என்பது அல்ல. எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பையாவது பெற்று  கட்சியை தன் பிடியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். செங்கோட்டையனின் முக்கியமான குற்றச்சாட்டு என்பது நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி சேர்ந்திருக்க வேண்டும் என்பதுதான். அப்போது பாஜக உடன் யார் அதிகம் நெருக்கம் காட்டுவது என்று பாஜகவினர் இடையே ஒரு போட்டி நிலவுகிறது.  பாஜகவின் கவலை என்பது, விஜய் களத்திற்கு வந்த பிறகு, அதிமுக வாக்குகளை எப்படியாவது சேர்க்க வேண்டும் என்பதுதான்.

செங்கோட்டையன், எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முன்பாக மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் போன்றவர்களை சந்தித்து பேசியுள்ளார். தற்போது பாஜகவின் திட்டமான அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியை அவர் தொடங்கியுள்ளார். செங்கோட்டையனின் செய்தியாளர் சந்திப்பு காரணமாக எடப்பாடி பழனிசாமி தன்னுடைய தேனி பிரச்சாரத்தை ரத்துசெய்துவிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். செங்கோட்டையன் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராக இல்லை. அப்படி இருந்தபோதும், இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எப்படி நடந்துகொள்கிறார் என்பதை பார்த்து கொங்கு பகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், செங்கோட்டையனை ஆதரிக்கலாம். மீண்டும் அதிமுகவில் ஒரு பிளவு ஏற்படலாம். அப்போது இரட்டை இலை சின்னத்தை முடக்கி, மீண்டும் அதிமுக பொதுக்குழுவை கூட்டி எடப்பாடியை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கவும் முடியும்.

இவற்றை எல்லாம் செய்தற்கு இந்த நடவடிக்கையில் வழிமுறைகள் உள்ளன. பாஜகவின் நோக்கம் எப்படியாவது அதிமுகவை அழித்துவிட்டு, அந்த வாக்குகளை தன் பக்கம் கொண்டுவர வேண்டும் என்பதுதான். ஓபிஎஸ்-ஐ களமிறக்கியது போல தற்போது செங்கோட்டையனை பாஜக களமிறக்கி உள்ளது. இதில் செங்கோட்டையன் ஸ்கோர் செய்து, பாஜக நினைத்தபடி நடந்துவிட்டால் அது அவர்களுக்கு லாபம். இல்லாவிட்டால் தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை தங்கள் இடங்களில் பகிர்ந்து அளிப்பதாக எடப்பாடியுடன் மீண்டும் டீல் பேசுவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ