Homeசெய்திகள்கட்டுரைத.வெ.க.விற்கு மதிமுக ராணுவத்தைப் போல உறுதுணையாக நிற்கும்: வைகோ பேச்சு!

த.வெ.க.விற்கு மதிமுக ராணுவத்தைப் போல உறுதுணையாக நிற்கும்: வைகோ பேச்சு!

-

- Advertisement -

“ராணுவம் முன்னே சென்று கண்ணிவெடிகளை அகற்றுவது போல, தமிழக வெற்றிக் கழகத்திற்கு மதிமுக எப்போதும் உறுதுணையாகச் செயல்படும்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ

we-r-hiring

கேரள மாநிலம் சார்பில் தனக்கு வழங்கப்பட்ட அப்துல் கலாம் விருதைப் பெற்றுக் கொண்டு பேசிய அவர், தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தமிழக அரசு குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.

கூட்டத்தில் வைகோ பேசிய முக்கிய விவரங்கள்:

விஜய் – பிஜேபி கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை:

முன்பை விட மூர்க்கத்தனமாக தமிழகத்திற்குள் நுழையப் பார்க்கும் பாஜகவுடன், த.வெ.க. தலைவர் விஜய் எப்போதுமே கூட்டணி வைக்கும் முடிவை எடுக்க மாட்டார். சமூக நீதியையும், மதச்சார்பின்மையையும் காக்கும் வகையில் செயல்படும் த.வெ.க. எக்காரணத்தைக் கொண்டும் பாஜக பக்கம் சாயாது.

அதிமுக மற்றும் எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்:

“ஆட்சி போயிடுச்சு, அதிகாரம் போயிடுச்சு, வர வேண்டிய கமிஷன் வரவில்லை” என்று சிலர் ஆத்திரமடைந்து அரசை விமர்சிக்கின்றனர். ஆட்சியை அமைப்பதற்காக அதிமுகவுக்கு ஆதரவளித்து மறைமுக அரசியல் செய்யும் திமுக போன்ற கட்சிகள் படுதோல்வி அடைந்து பூஜ்ஜியத்திற்குச் செல்லும்.

அப்துல் கலாம் நினைவுகள்:

வாழ்நாள் முழுவதும் எளிமையைக் கடைப்பிடித்த மாமனிதர் அப்துல் கலாமின் பெயரால் தனக்குக் கேரளாவில் வழங்கப்பட்ட விருது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும், தன் வாழ்நாளில் தான் எதிர்பாராத பெருமை இதுவென்றும் வைகோ குறிப்பிட்டார். மேலும், வாஜ்பாய் அமைச்சரவையில் குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்துல் கலாமின் பெயரைத் தான் பரிந்துரைத்தது குறித்தும் அவர் நினைவுகூர்ந்தார்.

திராவிட இயக்கப் பாரம்பரியம்:

எம்.ஜி.ஆர். மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களுடன் பயணித்த தனது நீண்ட அரசியல் பாதையை விவரித்த வைகோ, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாசிச சக்திகளை எதிர்த்து நிற்பதே திராவிட இயக்கத்தினரின் முக்கியக் கொள்கை என்றார்.

த.வெ.க. ஆட்சிக்குத் தடையாகச் செயல்படும் சக்திகளை எதிர்த்து, களத்தில் முன்னின்று பாதுகாப்பு அரணாக மதிமுக விளங்கும் என வைகோ தனது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

“மத்திய அரசும் – ராகுல் காந்தியும் இணைந்து தமிழகத்திற்குத் துரோகம்”: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

MUST READ