spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதவெக - பாஜக கூட்டணி? தமிழிசை கருத்தால் சர்ச்சை! டென்ஷனில் எடப்பாடி!

தவெக – பாஜக கூட்டணி? தமிழிசை கருத்தால் சர்ச்சை! டென்ஷனில் எடப்பாடி!

-

- Advertisement -

விஜய் பாஜக உள்ளிட்ட எந்த கட்சியுடன் வேண்டும் என்றாலும் கூட்டணி வைப்பார். ஆனால் திமுகவுக்கு எதிராக தான் இருப்பார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தவெக – பாஜக கூட்டணி தொடர்பாக சிடி நிர்மல்குமார் – தமிழிசை ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்களின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர் காணலில் கூறியிருப்பதாவது:- பாஜக உடன் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். அதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். நிர்மல் குமார், தவெகவை, அதிமுக என்று நினைவித்து விட்டார் போல. அவர் கட்சியில் சேர்த்தது முதலில் விஜய்க்கு தெரியுமா என்று கூட தெரியவில்லை. விஜய் என்பவர், பாஜகவால் வேறு பெயரில் கட்சி நடத்துகிற சங்கியாக தான் பாஜக பார்க்கிறார்கள். அதன் பின்னணியில் உள்ள அரசியல் தமிழிசை சௌந்தரராஜனுக்கு தெரிந்திருக்கலாம். அதனால் நிர்மல் குமார் சொன்னால் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஏன் என்றால் அவர்களுக்கு தெரியும் விஜய் யார் என்று? அவரை யார் இறக்கிவிட்டார்கள் என்று.

தவெகவில் தெரியாத்தனமாக கொள்கை தலைவர்கள் என்று சிலரை அறிவித்துள்ளார்கள். அப்படி இருக்கிறபோது பாஜகவுடன் தவெக கூட்டணி வைத்தால் கட்சி ஆரம்பத்திலேயே காணாமல் போய்விடும். பாஜக இவர்களை இறக்கி விட்டிருப்பதற்கு காரணம் திமுகவை அழிக்க வேண்டும் என்பதுதான். பாஜக உடன் கூட விஜய் சேருவார், ஆனால் திமுகவுடன் சேர மாட்டார். அதுதான் அவர்களது அஜெண்டாவே. பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூட அதிமுக என்கிற வார்த்தையை பயன்படுத்தி இருக்க மாட்டார்கள். திமுக என்கிற வார்த்தை சம்பந்தம் இல்லாமல் வரும். ஆனால் அதிமுக, பாஜக என்கிற வார்த்தை வராது. வக்பு சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். நீதிமன்றத்தில் வழக்காடுகிறார். ஆனால் விஜய் வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசை எந்த இடத்திலும் கேள்வி கேட்கவில்லை. விஜய், தனது முதலாளியை எப்படி கேள்வி கேட்பார். பாஜகவின் ஒரு பிரிவுக்கு தலைவராக உள்ளார்.

‘ மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’-  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக, தவெக கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்பு கிடையாது. ஏனென்றால் விஜய் அன்புமணியின் வீட்டிற்கோ, தைலாபுரம் வீட்டிற்கோ நிச்சயமாக செல்ல மாட்டார். எடப்பாடி பழனிசாமியை கூட கடுமையாக விமர்சித்து பேசிவிட்டு, அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் விஜய் வீட்டிற்கு செல்வது என்பது பெருத்த அவமானமாகிவிடும். அதனால் அவர்கள் தவெக உடன் கூட்டணிக்கு செல்ல மாட்டார்கள். அதிமுக – பாஜக கூட்டணிக்கு தான் பாமக செல்லும். ராமதாசுக்கு பிடிக்காவிட்டாலும் பொருத்துக் கொண்டு இருந்துவிடுவார்கள். கிருஷ்ணசாமி, திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று சொல்கிறார். திமுகவில் கிருஷ்ணசாமியின் அளவுகோல் என்ன என்று தெரியும். அதனால் அவருக்கு என்ன இடங்கள் கொடுப்பார்களோ அதை தருவார்கள். கிருஷ்ணசாமிக்கு 2 இடங்களை கலைஞர் கொடுத்தார். அந்த 2 இடங்களிலும் அவரே போட்டியிட்டார். அப்போது எவ்வளவு பதவி வெறி என்று பாருங்கள்.

நாம் தமிழர் கட்சியை விஜய் சேர்க்க மாட்டார். ஏன் என்றால் சீமான் எப்படி விஜய்க்கு பணிந்து போவார். விஜய், சீமான் வீட்டிற்கு சென்று பார்க்க மாட்டார். அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு விஜய் போவாரா என்றால் போக மாட்டார். தன்னுடைய தந்தை வீட்டிற்கே செல்லாத அன்புமணி, விஜய் வீட்டிற்கு செல்வாரா? தேமுதிகவில் தனது மகனை கரையேற்றுவதற்காக பிரேமலதா பாடுபடுகிறார். மகன்களை கரை ஏற்றுவதற்காக திரைத்துறையில் முயற்சி செய்தார். ஆனால் அவர்களுக்கு ஒர்க் ஆகவில்லை. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக, அதிமுக – பாஜக உடன் கூட்டணி அமைக்க தான் வாய்ப்பு உள்ளது. திமுகவில் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது என்று தெரியும். குறைவான இடங்கள்தான் தருவார்கள் என்பதால், அதிமுக கூட்டணிக்கு தான் செல்வார். இதேபோல், கிருஷ்ணசாமியும் அதிமுக கூட்டணிக்கு தான் செல்ல வாய்ப்பு உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ