spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜய் - காங்கிரஸ் சந்திப்பு பொய்! இது யார் பார்த்த வேலை தெரியுமா? உண்மையை உடைக்கும்...

விஜய் – காங்கிரஸ் சந்திப்பு பொய்! இது யார் பார்த்த வேலை தெரியுமா? உண்மையை உடைக்கும் சுபேர் ஜமால்!

-

- Advertisement -

திமுக மீதான தனிப்பட்ட விரோதம் காரணமாக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரிப்பதற்கான முயற்சிகளில் பிரவீன் சக்ரவர்த்தி ஈடுபடுவதாக மூத்த பத்திரிகையாளர் சுபேர் ஜமால் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

விஜய் – பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சுபேர் ஜமால் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்மையில் திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி நேற்று நடிகர் விஜயை சந்தித்து பேசியுள்ளார்.

டேட்டா அனலிஸ்ட் ஆகிய பிரவின் சக்ரவர்த்தி, வாக்கு திருட்டு தொடர்பான விஷயங்களில் தரவுகளை இவர்தான் சேகரித்து வழங்குகிறார். சென்னையை சேர்ந்த இவருக்கு, கடந்த மக்களவை தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். திமுக தரப்பில் இருந்து சில அழுத்தம் கொடுக்கப்பட்டதால், அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அங்கு வழக்கறிஞர் சுதா போட்டியிட்டு வென்றார்.

2026 தேர்தல்! ஆட்சி அமைக்கப் போவது யார்?

இதனால் பிரவீன் சக்ரவர்த்தி, திமுக மீது பகை உணர்வுடன் இருந்து வருகிறார். தமிழ்நாட்டில் எப்படியாவது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்ற வேண்டும் என்கிற திட்டத்துடன் வெளியே ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர்களும், காங்கிரசுக்குள்ளே இருந்து பிரவீன் சக்ரவர்த்தி போன்றவர்களும் வேலை செய்கிறார்கள். கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்திருக்கும் நிலையிலும், பிரவீன் சக்ரவர்த்தி தனியாக சென்று விஜயை சந்திப்பதன் வாயிலாக கூட்டணிக்குள் குழப்பதை ஏற்படுத்துகிற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்.

பிரவீன் சக்ரவர்த்தி, ராகுல்காந்தி சொல்லி தான் விஜயை சந்தித்தாரா என்கிற கேள்வி எழலாம். அப்படி ராகுல்காந்தி சொல்லித்தான் பேசினார் என்றால்? எதற்காக திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்த குழு அமைக்க வேண்டும்? அதேபோல், திமுக கூட்டணியில் காங்கிரஸ் 70 இடங்களும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதலமைச்சர் பதவி கேட்டார்கள் என்று வதந்திகளை பரவ விடுகிறார்கள். திமுக தரப்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழுவே அமைக்கப்படாத சூழலில், இவர்கள் யாரிடம் சென்று இதனை கேட்டார்கள்?

இந்த செய்திகளை யார் கொடுத்தார்? பாஜகவின் நோக்கம் என்பது காங்கிரசை பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான். தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு வலிமையான அடித்தளம் உள்ளது. இங்கே அந்த கட்சிக்கு 10 எம்.பிக்கள் இருக்கிறார்கள். 20-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் பீகாரில் 6 இடங்களில் தான் வெற்றி பெற்றனர். காரணம் அவர்களுக்காக ஆர்.ஜே.டி. வேளை பார்க்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள் காங்கிரசின் வெற்றிக்காக பாடுபட்டனர்.

மதச்சார்பற்ற ஒரு அணி என்கிறபோது அதில் காங்கிரஸ் இருப்பது கூடுதல் பலமாகும். தேசிய அளவில் எதிர்க்கட்சியான காங்கிரசின் தயவு திமுகவுக்கு தேவை. அதேபோல், தமிழ்நாட்டில் திமுகவின் தயவு காங்கிரசுக்கு தேவையாகும். பிரவீன் சக்ரவர்த்திக்கு தனிப்பட்ட முறையில் திமுக மீது வெறுப்பு உள்ளது. அதை தீர்த்துக்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சிக்குள்ளே இருந்துகொண்டே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தேசிய தலைமை அவரை கண்டிக்க வேண்டும். அல்லது கட்சியில் இருந்து அவரை நீக்க வேண்டும். திருச்சி வேலுசாமி, ராஜேஸ்குமார், கார்த்தி சிதம்பரம் போன்றவர்கள் வெளிப்படையாகவே திமுக எதிர்ப்பை பேசுகிறார்கள். இவற்றை எல்லாம் தங்கள் கட்சி தலைமையிடம் தான் அவர்கள் பேச வேண்டும். தவிர இதை பொதுவெளியில் பேசக்கூடாது.

காங்கிரஸ் தேசிய தலைமை தமிழ்நாட்டில் திமுக கூட்டணி தான் வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது. இவர்கள் சொல்வதை கட்சி தலைமை கேட்கவில்லை. ராகுல்காந்தி, விஜயுடன் உறவை தொடர்ந்து வருவது போன்ற ஒரு பிம்பத்தை தவெக தரப்பில் கட்டமைக்கிறார்கள். பிரவீன் சக்ரவர்த்தி விஜயை சென்று சந்தித்தார் என்கிறபோது அதை அதிகாரப்பூர்வமாக விஜயும் அறிவிக்கவில்லை. அனைத்து நிகழ்வுகளுக்கும் கருத்து தெரிவிக்கும் பிரவீன் சக்ரவர்த்தி ஏன் சந்திப்பை உறுதிபடுத்தவில்லை. அப்படி செய்தால் அவரை கட்சியில் இருந்து நீக்கிவிடுவார்கள்.

முதலமைச்சருடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

திமுக கூட்டணி தேசிய அளவில் நமக்கு தேவைப்படுகிறது என்பதில் ராகுல்காந்தி உறுதியாக இருக்கிறார். ஆனால் சிலர் காங்கிரசுக்குள் இருந்துகொண்டு பாஜகவின் நோக்கத்தை செயல்படுத்த சிலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். பிடிஆர் தவெகவுக்கு வருவார் என்று ஒரு பெரிய பொய்யை சொல்கிறார்கள். பிடிஆர் பாரம்பரியம் இவர்களுக்கு தெரியுமா? பிடிஆர்-க்கும், திமுக குடும்பத்திற்கு என்ன உறவு என்று இவர்களுக்கு தெரியுமா? இவற்றை எல்லாம் தெரியாமல் பிடிஆர் தவெக வருவார் என்பது மிகப்பெரிய நகைச்சுவை ஆகும்.

அவர் அரசியலை விட்டு வேண்டுமெனில் செல்வாரே தவிர, இன்னொரு கட்சிக்கு போக மாட்டார். அந்த அளவுக்கு திராவிட பாரம்பரியத்தில் ஊறியவர் அவர். சபரீசனின் மிகவும் நெருங்கிய உறவினர் பிடிஆர். அப்படி இருக்கையில் அவர் எப்படி திமுகவுக்கு எதிராக செல்வார். இப்படி பொய்யான செய்திகளை கசியவிட்டு கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள். மற்றொன்று மாற்று கட்சியினரை தங்கள் பக்கம் இழுப்பதாகும். கண்டிப்பாக பிடிஆரோ, காங்கிரசோ தவெக பக்கம் செல்ல வாய்ப்பு கிடையாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ