spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்நீட் தேர்வு எழுதிய மாணவர்களே.. டோண்ட் ஒர்ரி.. தமிழக அரசு தரும் மனநல ஆலோசனை

நீட் தேர்வு எழுதிய மாணவர்களே.. டோண்ட் ஒர்ரி.. தமிழக அரசு தரும் மனநல ஆலோசனை

-

- Advertisement -

நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 சேவை மையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

we-r-hiring

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், ”மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் 104 மருத்துவ தகவல் மையம் தொடங்கி, நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கும் திட்டத்தை தொடர்ச்சியாக 4 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் பாடத்திற்கு இடம் கிடைக்காத மாணவர்களுக்கும் மனநல ஆலோசனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் 1,35,715 பேர், இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 76,181 பேர், தேர்ச்சி பெறாத மாணவர்கள் 59,534 பேர், முதல் கட்டமாக 80 மனநல ஆலோசகர்களை கொண்டு 2 ஷிப்ட்கள் என்கின்ற வகையில் இன்று மனநல ஆலோசனைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

80 மனநல ஆலோசகர்கள் இந்த பயிற்சியினை தொடங்கி இருக்கிறார்கள். மாணவர்களிடத்தில் நீட் தேர்வு தேர்ச்சி பெற தவறியிருந்தாலும், அடுத்தடுத்த வாய்ப்புகள் இருக்கிறது, மீண்டும் இதே தேர்வு சந்திக்கும் நிலை இருக்கிறது. எனவே மனம் தளராமல் உங்களுடைய படிப்பை தொடர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அதேபோல் பெற்றோர்களிடத்திலும் கூட பிள்ளைகளிடம் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடாது, அதிகமாக கோபப்படகூடாது, குழந்தைகளிடம் பதட்டத்தை ஏற்படுத்தக் கூடாது என்று பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

எம்.பி.பி.எஸ் எனும் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்து வெவ்வேறு வாய்ப்புகளும் இருக்கிறது என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக பல் மருத்துவம், நர்சிங், பாரா மெடிக்கல் என்று ஏறத்தாழ 20,000த்திற்கும் மேற்பட்ட படிப்புகளில் சேர்வதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. இதோடுமட்டுமல்லாமல் கால்நடை மருத்துவம் போன்ற பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. அதோடு மருத்துவத்துறையிலேயே இந்திய மருத்துவம் என்று சொல்லக்கூடிய சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி போன்ற படிப்புகளையும் நீங்கள் தொடரலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

நீட் தேர்வு இல்லாமலேயே நேரடியாக 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து சேரக்கூடிய யோகா போன்ற பட்டப்படிப்புகள் இருக்கின்றது. எனவே மாணவர்களின் மனநலனை இன்றைக்கு திடப்படுத்திடும் வகையில் அடுத்தடுத்து இருக்கும் வாய்ப்புகள் அவர்களுக்கு அறிவித்திடும் வகையிலும் ஒரு முயற்சியாக மனநல ஆலோசனை பயிற்சி தொடங்கப்படுகிறது.

மேலும் மாணவர்களுக்கு எந்த மாதிரியான மனநல ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது என்றால் தனிமையை தவிர்த்துக் கொள்ள வேண்டும், மற்றவர்களிடத்திலிருந்து விலகி இருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும், தூக்கமின்மை, பசியின்மை, தற்கொலை முயற்சி, தற்கொலை எண்ணம், தொடர்ந்து அழுதுக் கொண்டிருப்பது, அதிகமாக கோபம் கொண்டு அருகில் இருப்பவர்களிடம் பேசுவது என்று பயத்தோடு, பதற்றத்தோடு இருக்கும் மாணவர்களை நிதானப்படுத்துவதோடு, அவர்களுக்கான மன அமைதியை ஏற்படுத்துகின்ற வகையில் இந்தப் பயிற்சி பயன்படும்” என்று தெரிவித்தார்.

MUST READ