- Advertisement -
(ஜூலை-23) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.760 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.95 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,380-க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.75,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜெட் வேகத்தில் அதிகரித்து வரும் தங்கம் கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து தலைகீழாக மாறியுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சில்லறை வணிகத்தில் வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.1 உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.129-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,29,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.