சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிபிராஜ் (22). நடன கலைஞரான இவர், ஈக்காட்டுதாங்கல் பகுதியில் டான்ஸ் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். மேலும் தனது டான்ஸ் நடன வீடியோக்களை அவ்வப்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாவில் பலரும் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வேகமாக வந்துக்கொண்டிருந்த சிபிராஜை காவல்துறையினா் மறித்து சோதனை செய்த மேற்க்கொண்டபோது, பதற்றத்துடனும் முன்னுக்கு பின் முரணாகவும் பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், சிபிராஜை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட 55 கிராம் மதிப்புள்ள மெத்தபெட்டமின் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தார்.
மேலும் 4 லைட்டர்கள், விலை உயர்ந்த 2 செல்போன்கள் மற்றும் பைக்கை போலீசாா் பறிமுதல் செய்தனர். திருவள்ளூரில் விற்பனை செய்வதற்காக போதை பொருளை எடுத்து வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிபிராஜை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் பகுதியில் போதை மாத்திரைகள், போதை பொருட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் ஏராளமான இளைஞர்கள் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். எனவே, போலீசார் இரும்புக்கரம் கொண்டு போதை பொருட்கள் கடத்தலை தடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெருக்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய எவ்வளவு அவகாசம் தேவை? – உயர்நீதிமன்றம்



