spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மது குடித்து தகராறு செய்த கணவன்.…கொடூரமாக கொலை செய்த மனைவி!!

மது குடித்து தகராறு செய்த கணவன்.…கொடூரமாக கொலை செய்த மனைவி!!

-

- Advertisement -

ஓசூரில் கணவனை சரமாரியாக தாக்கி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனா்.மது குடித்து தகராறு செய்த கணவன்.…கொடூரமாக கொலை செய்த மனைவி!! கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்பேட்டை நிலமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (32). இவரது மனைவி அம்சவள்ளி (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பார்த்திபன் ஓசூர் உழவர் சந்தையில் மூட்டை தூக்கும் வேலை செய்து வந்துள்ளாா். அம்சவள்ளி சென்ட்ரிங் போடும் கூலி வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில், மனைவியின் நடத்தை மீது அவரது கணவன் பார்த்திபனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தினந்தோறும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 2 நாட்களாக பார்த்திபன் மது அருந்தி விட்டு, வீட்டிற்கு வந்து அம்சவள்ளியிடம் தகராறு செய்து, அவரை அடித்து துன்புறுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளாா். நேற்று முன்தினம் இரவு இதே போல பார்த்திபன் மது அருந்திவிட்டு, போதையில் வீட்டிற்கு சென்றுள்ளாா். பின்னா் அம்சவள்ளியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அம்சவள்ளி, பார்த்திபனை சரமாரியாக அடித்து உதைத்து, காலால் கழுத்தை மிதித்துள்ளார். மேலும், தான் அணிந்திருந்த புடவையால் கணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதில், பார்த்திபன் உயிரிழந்தார். பின்னர் அம்சவள்ளி, தனது கணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, பார்த்திபனின் அண்ணன் விநாயகமூர்த்திக்கு தகவல் கொடுத்துள்ளார்.

we-r-hiring

தகவல் கிடைத்ததும் உடனடியாக அங்கு விரைந்த விநாயகமூர்த்தி, தம்பியின் உடலை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், பார்த்திபன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், அம்சவள்ளியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

படுக்கையில் கணவனின் பிணம்…விடிய விடிய ஆபாச வீடியோக்களைப் பார்த்த சைக்கோ மனைவி!!

MUST READ