spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்படுக்கையில் கணவனின் பிணம்…விடிய விடிய ஆபாச வீடியோக்களைப் பார்த்த சைக்கோ மனைவி!!

படுக்கையில் கணவனின் பிணம்…விடிய விடிய ஆபாச வீடியோக்களைப் பார்த்த சைக்கோ மனைவி!!

-

- Advertisement -

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கணவரை கொன்றுவிட்டு  இரவு முழுவதும் செல்போனில் ஆபாச வீடியோக்களைப் பார்த்துக்கொண்டுருந்த சைக்கோ மனைவி.படுக்கையில் கணவனின் பிணம்…விடிய விடிய ஆபாச வீடியோக்களைப் பார்த்த சைக்கோ மனைவி!!ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் துகிராலா மண்டலம் சிலுவூரைச் சேர்ந்த லோகம் சிவநாகராஜு (45), லட்சுமி மாதுரி தம்பதியினருக்கு 2007-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வேலைக்காக இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத் சென்றனர். அங்கு சினிமா ஹாலில் வேலை செய்து கொண்டிருந்த மாதுரிக்கு அடிக்கடி சினிமாவுக்கு வரும் கோபி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த அறிமுகம் திருமணத்திற்குப் புறம்பான உறவாக மாறியது. கோபி ஐதராபாத்தில் கார் டிராவல்ஸ் நடத்தி வருவதால், கணவரை அவருக்கு அறிமுகம் செய்தார். சிவநாகராஜுக்கு டிரைவிங் தெரியும் என்பதால், அவரை டிரைவராக பணி அமர்த்தி கொண்ட கோபி மாதுரியுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவைத் தொடர்ந்தார். இந்த விஷயம் கணவருக்குத் தெரிந்ததும் சிவநாகராஜு தனது மனைவியை அழைத்துக்கொண்டு சிலுவூருக்கு வந்தார்.

ஆனால் மாதுரி இங்கு வந்த பிறகும் கோபியுடன் இருந்த உறவைத் தொடர்ந்தார். மீண்டும் இருவரின் செயல்பாடு குறித்து சிவநாகராஜு கேள்வி எழுப்பியதும் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் தொடங்கின. இந்த நிலையில் தனது கணவா் திருமணத்திற்கு புறம்பான உறவுக்கு தடையாக இருப்பதால் எப்படியாவது அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி இந்த மாதம் 18-ம் தேதி இரவு கணவருக்காக பிரியாணி செய்தார். பின்னர் அந்த பிரியாணியில் 20 தூக்க மாத்திரைகளைப் பொடியாக்கி அதில் கலந்து  நாகராஜுக்கு கொடுத்தார். இதனை சாப்பிட்ட நாகராஜு ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றதும் இரவு 11.30 மணிக்கு காதலன்  கோபியை  வீட்டுக்கு வரவழைத்தார். நாகராஜு மயக்கத்தில் இருந்தபோது கோபி அவரது மார்பில் அமர்ந்து கொள்ள மாதுரி தலையணை எடுத்து கணவரின் முகத்தில் அழுத்திப் பிடித்து மூச்சு விடமுடியாமல் செய்தார். இதனால் நாகராஜு இறந்துவிட்டார் என்று உறுதிப்படுத்திக்கொண்டு கோபி வீட்டிலிருந்து சென்றுவிட்டார். அதன் பிறகு மாதுரி செல்போனில் ஆபாச வீடியோக்களைப் பார்த்துக் கொண்டு இரவு முழுவதும் கழித்தார்.

we-r-hiring

விடியற்காலை நான்கு மணிக்கு வீட்டுச் சுற்றுப்புறத்தினரை அழைத்து தனது கணவர் இதய வலியால் இறந்துவிட்டார் என்று நாடகத்தை அரங்கேற்றினார்.

விடியற்காலம் தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று மாதுரி சுற்றி இருந்தவர்களை நம்ப வைக்க முயற்சித்தார். ஆனால் கணவருடன் சண்டைகள், திருமணத்திற்குப் புறம்பான உறவு பற்றித் தெரிந்த சுற்றுப்புறத்தினர் மாதுரியைச் சந்தேகித்தனர். நாகராஜுக்கு, மனைவி மாதுரியுடன் அடிக்கடி சண்டைகள் நடக்கும். எனவே நாகராஜு மரணத்தில் சந்தேகம் இருந்ததால் நாகராஜின் உடலை இறுதிச் சடங்குகளுக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகள் நடக்கும் போது அவரது நண்பர்கள் அங்கு வந்தனர். உடலைப் பார்த்த நண்பர்கள், நாகராஜின் காதிலிருந்து ரத்தம் வடிவதை பார்த்து காது அருகே காயம் இருப்பதைக் கவனித்தனர். உடனடியாக அவர்கள் நாகராஜின் தந்தையுடன் சேர்ந்து போலீசாருக்கு புகார் அளித்தனர். உடனடியாக வழக்கு பதிவு செய்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் நாகராஜின் மார்பு அருகே எலும்புகள் உடைந்திருப்பது, சுவாசம் தடைப்பட்டதாலேயே அவர் இறந்தார் என்று தெரிய வந்தது.  போலீசார் மாதுரியைக் காவலில் எடுத்து விசாரித்ததில் நாகாராஜு கொலை செய்யப்பட்ட உண்மைகளை கூறினார். இதனையடுத்து மாதுரியைக் காவலில் எடுத்து ரிமாண்டுக்கு அனுப்பிய போலீசார் தலைமறைவாக இருக்கும் காதலன் கோபியைத் தேடி வருகின்றனர்.

எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்!!

MUST READ