Homeசெய்திகள்மாவட்டம்மதுரையில் நடிகை த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம்: அரசியலுக்கு வருமாறு மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி அதிரடி...

மதுரையில் நடிகை த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம்: அரசியலுக்கு வருமாறு மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி அதிரடி வரவேற்பு!

-

- Advertisement -

தமிழ் சினிமா திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, கடந்த சில ஆண்டுகளாகப் பொது நிகழ்ச்சிகளிலும் பல்வேறு சமூக நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு வரும் நிலையில், அவர் விரைவில் அரசியலுக்குள் நுழைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், மதுரையில் முதன்முறையாக த்ரிஷாவுக்கு நற்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளதுடன், அவரை அரசியலுக்கு அழைக்கும் விதமாக மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

த்ரிஷா

we-r-hiring

போஸ்டரின் சிறப்பம்சங்கள்:

மதுரை மாநகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் ரசிகர்கள் ஒட்டியுள்ள இந்தப் போஸ்டர்கள் அனைவரின் பார்ையையும் ஈர்த்து வருகின்றன. அந்தப் போஸ்டர்களில் இடம்பெற்றுள்ள முக்கிய வாசகங்கள் மற்றும் விவரங்கள்:

வீரமங்கை பரம்பரை:

தமிழகத்தின் வீரமங்கை வேலுநாச்சியார் வழியில் வந்தவர் என்ற குறிப்புடன் போஸ்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அரசாங்க அங்கீகாரம்:

“தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா த்ரிஷாவுக்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம்” என்ற வாசகம் அதில் இடம்பெற்றுள்ளது.

அரசியல் களம்:

“எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை” என்றும், “மதுரை மீனாட்சி தாய் ஆசீர்வாதத்தால்” தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் போஸ்டர்களில் வீரமங்கை வேலுநாச்சியாரின் படத்துடன் நடிகை த்ரிஷாவின் படமும் பெரிய அளவில் இடம்பெற்றுள்ளது.

சினிமா முதல் அரசியல் களம் வரை…:

திரைத்துறையில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தனது திறமையான நடிப்பால் ஜொலித்து வரும் த்ரிஷாவுக்கு, தற்போது அரசியல் ரீதியான வரவேற்பையும் ஆதரவையும் தெரிவிக்கும் வகையில் அவரது ரசிகர்கள் இந்த நற்பணி மன்றத்தைத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டின் அரசியல் தலைநகராகக் கருதப்படும் மதுரையில், த்ரிஷாவை அரசியலுக்கு அழைக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டர்கள் தற்போது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை: 3 மாதங்களாகக் குடிநீரின்றி அவதிப்படுவதால் போராட்டம்!

MUST READ