பெங்களூரில் நடந்த கொடூரம்… காதலித்து 10 மாதங்களில் முடிந்த சோகம்!
பெங்களூரில் உணவு சமைக்காமல் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதிலேயே கவனம் செலுத்தி வந்த மனைவியைக் கொன்று, உடலைப் போர்வையால் மறைத்து வைத்துவிட்டுத் தப்பிச் சென்ற கணவரைப் காவல்துறையினர் பீகாரில் வைத்துக் கைது செய்தனர்.

காதல் திருமணம் – தொடர் தகராறு
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ் (24) என்பவரும், ரீமா என்பவரும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் பெங்களூரில் வசித்து வந்தனர். இந்நிலையில், ரீமா எப்போதும் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோக்கள் பதிவிடுவதில் தீவிர கவனம் செலுத்தி வந்ததாகவும், இதனால் வீட்டின் அன்றாட வேலைகளையும் கணவரையும் க கவனிக்காமல் தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கொலையில் முடிந்த சண்டை
சம்பவத்தன்று, ரீமா உணவு சமைக்காதது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் உருவாகியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தீரஜ், ரீமாவை கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், கொலையை மறைப்பதற்காக மனைவியின் உடலைப் போர்வையால் சுற்றி வீட்டிற்குள் மறைத்து வைத்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் தனது சொந்த ஊரான பீகாருக்குத் தப்பி ஓடியுள்ளார்.
கணவர் அதிரடி கைது
இச்சம்பவம் குறித்துத் வழக்குப் பதிவு செய்த பெங்களூரு காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்திப் பீகாரில் தலைமறைவாக இருந்த தீரஜைக் கைது செய்தனர். காவல்துறையின் விசாரணையில், ரீல்ஸ் மோகத்தால் எழுந்த சண்டையில் மனைவியைக் கொன்றதாகத் தீரஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். காதலித்துத் திருமணமான 10 மாதங்களிலேயே நடந்த இந்த விபரீதச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியா இருக்குற பெண்களே உஷார்! இரவில் வீடு புகுந்து ஆபாச வீடியோ… நெல்லையில் அரங்கேறிய பகீர் சம்பவம்!
