Homeசெய்திகள்க்ரைம்தனியா இருக்குற பெண்களே உஷார்! இரவில் வீடு புகுந்து ஆபாச வீடியோ... நெல்லையில் அரங்கேறிய பகீர்...

தனியா இருக்குற பெண்களே உஷார்! இரவில் வீடு புகுந்து ஆபாச வீடியோ… நெல்லையில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

-

- Advertisement -

பொதுமக்களிடம் அடிவாங்கி மருத்துவமனையில் இருந்து தப்பியவர் திருவனந்தபுரத்தில் பிடிபட்டார்!தனியா இருக்குற பெண்களே உஷார்! இரவில் வீடு புகுந்து ஆபாச வீடியோ... நெல்லையில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

நெல்லை மாவட்டத்தில் தனியாக வசிக்கும் பெண்களைக் குறிவைத்து, இரவில் வீடுகளுக்குள் புகுந்து ஆபாச வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வந்த பீர்முகமது (23) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

we-r-hiring

நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
நெல்லைப் பகுதியில் தனியாக வசித்து வரும் பெண்களை நள்ளிரவு நேரங்களில் நோட்டமிட்டு, அவர்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து ஆபாச வீடியோக்கள் எடுப்பதை பீர்முகமது வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கம்போல் இரவு நேரத்தில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த அவர், அப்பெண் தூங்கிக் கொண்டிருந்த போது அவரை ஆபாசமாகப் படம் பிடிக்க முயன்றுள்ளார்.

பொதுமக்கள் தர்மஅடி – மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்
இதை அறிந்து திடுக்கிட்டு எழுந்த அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் உடனடியாகத் திரண்டு வந்தனர். தப்பியோட முயன்ற பீர்முகமதுவைப் பிடித்து பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கினர். காயமடைந்த அவரை மீட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கிருந்து காவல்துறையினருக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் தெரிவிக்காமல் ரகசியமாகத் தப்பித்துத் திருவனந்தபுரத்திற்குச் சென்று தலைமறைவானார்.

திருவனந்தபுரத்தில் வைத்து கைது
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த நெல்லை காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அதில், திருவனந்தபுரத்தில் பீர்முகமது பதுங்கியிருப்பது தெரியவந்ததையடுத்து, அங்குச் சென்ற தனிப்படை காவல்துறையினர் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பீர்முகமதுவை நெல்லைக்குக் கொண்டு வந்த காவல்துறையினர், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வேறு எந்தெந்தப் பகுதிகளில் இதுபோன்று அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மற்றும் அவரது மனைவி கைது செல்லாது: காவலில் வைக்கச் சென்னை நீதிமன்றம் மறுப்பு!

MUST READ