Homeசெய்திகள்க்ரைம்தாம்பரம் அருகே அடுத்தடுத்து தொடர் கொள்ளை: ஆவின் பாலகத்தின் பூட்டை உடைத்து ரூ.25,000 ரொக்கம் மற்றும்...

தாம்பரம் அருகே அடுத்தடுத்து தொடர் கொள்ளை: ஆவின் பாலகத்தின் பூட்டை உடைத்து ரூ.25,000 ரொக்கம் மற்றும் ஐஸ்கிரீம் தின்றுவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!

-

- Advertisement -

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருகே உள்ள முடிச்சூர் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் அடுத்தடுத்து கடைகளின் பூட்டை உடைத்துத் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.தாம்பரம் அருகே அடுத்தடுத்து தொடர் கொள்ளை: ஆவின் பாலகத்தின் பூட்டை உடைத்து ரூ.25,000 ரொக்கம் மற்றும் ஐஸ்கிரீம் தின்றுவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!

குறிப்பாக, ஒரு ஆவின் பாலகத்தில் புகுந்து ரூ.25,000 ரொக்கத்தைக் கொள்ளையடித்ததுடன், அங்கிருந்த ஐஸ்கிரீமைச் சாப்பிட்டுவிட்டு ஜாலியாகச் சென்றுள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

we-r-hiring

ஆவின் பாலகத்தில் கைவரிசை
சென்னை பெருங்களத்தூர் அடுத்த முடிச்சூர் பாரத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் மணிமங்கலம் பிரதான சாலையில் கடந்த 8 ஆண்டுகளாக ஆவின் பாலகம் நடத்தி வருகிறார்.

ஷட்டர் பூட்டு உடைப்பு:
வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டுச் சென்ற ஊழியர், மறுநாள் காலை கடையைத் திறக்க வந்தபோது ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாகக் கடை உரிமையாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிசிடிவி காட்சிகளில் அம்பலம்:
பீர்க்கன்கரணை காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 3 இளைஞர்கள் எந்தவித பயமும் இன்றி கடைக்குள் நுழைவதும், சிசிடிவி கேமராவைக் கண்டதும் தங்களது டி-சர்ட்டால் முகத்தை மறைத்துக்கொள்வதும் பதிவாகியிருந்தது.

ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு கூலாகத் தப்பியோட்டம்- விசித்திரத் திருட்டு:
கடையில் கல்லாவில் இருந்த ரூ.25,000 ரொக்கப் பணத்தைத் திருடிய அந்த மர்ம நபர்கள், பணத்தை அங்கேயே சரிபாதியாகப் பிரித்துக் கொண்டனர். அதோடு நில்லாமல், கடையிலிருந்த ஐஸ்கிரீமைச் சாப்பிட்டுவிட்டு, ஜூஸ் குடித்துவிட்டு மிகவும் இயல்பாக அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

அடுத்தடுத்த கடைகளில் கைவரிசை மற்றும் பொதுமக்கள் அச்சம்
இந்த ஆவின் பாலகத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மேலும் இரண்டு மளிகை கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டுச் சில்லறை காசுகள் திருடப்பட்டுள்ளன. மேலும், மணிமங்கலம் பிரதான சாலையில் உள்ள ‘சாந்தி கிளினிக்’ மருந்தகத்திற்குள்ளும் நுழைந்த அந்தக் கொள்ளையர்கள், மதிப்புமிக்க பொருட்கள் எதுவும் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

அதிகரிக்கும் குற்றங்கள்:
பெருங்களத்தூர் காவல் நிலையம் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போது முடிச்சூரில் அடுத்தடுத்து நடக்கும் தொடர் திருட்டுகள் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இரவு நேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி, தொடர் கொள்ளையில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்களைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அப்பகுதி வணிகர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவியிடம் கத்தி முனையில் நகை பறிப்பு: பரோலில் வந்து கைவரிசை காட்டிய ஆயுள் தண்டனை கைதி கைது!

MUST READ