Homeசெய்திகள்க்ரைம்தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் நகைகள் மீட்பு – புதைத்து வைத்த இடத்திற்கு இன்ஸ்டா...

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் நகைகள் மீட்பு – புதைத்து வைத்த இடத்திற்கு இன்ஸ்டா இன்ஃப்ளுயன்சர் மீனாட்சியை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை!

-

- Advertisement -

மதுரையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைக் கொள்ளை வழக்கில், மேலும் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சர் மீனாட்சியை, நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் நகைகள் மீட்பு – புதைத்து வைத்த இடத்திற்கு இன்ஸ்டா இன்ஃப்ளுயன்சர் மீனாட்சியை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை!

மதுரை மாடக்குளம் மலையடிவாரப் பகுதியில் நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மீனாட்சியை அங்கு அழைத்துச் சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாக்குப்பையில் கட்டப்பட்ட நிலையில் நகைகள் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டன.

ஏற்கனவே இந்தக் கொள்ளை வழக்கில் சில நகைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எஞ்சிய நகைகளையும் மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட நகைகளின் அளவு மற்றும் அவை கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவையா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இருவர் கைது! – இன்ஸ்டா இன்புளுயன்சர் இளம்பெண், பட்டதாரி இளைஞரின் தந்தை சிக்கினர்!

MUST READ