spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதக்காளி, பீன்ஸ் விலை “மளமளவென”குறைவு

தக்காளி, பீன்ஸ் விலை “மளமளவென”குறைவு

-

- Advertisement -

கோயம்பேட்டில் நேற்று முன்தினம் கிலோ 30 ரூபாய்க்கு விற்ற தக்காளி நேற்று  60 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.தக்காளி, பீன்ஸ் விலை “மளமளவென”குறைவுசென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து அதிகளவிலான லாரிகளில் காய்கறி வருகிறது. சராசரியாக நாளொன்றுக்கு 800 – 900 வரையிலான லாரிகளில் காய்கறிவரத்து இருக்கும். மழைக்காலங்களில் எப்போதும் தக்காளியின் விளைச்சல் பாதிப்பு அடையும். விலையும் ‘கிடுகிடு’வென உயரும். அதன்படி, சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை நேற்று முன்தினம் முதல் உயர்ந்து காணப்பட்டது. கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக தக்காளி விலை குறைந்தே இருந்தது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.25 வரை விற்கப்பட்டு வந்தது. வெளி மார்க்கெட் மற்றும் சில்லறை கடைகளில் இதன் விலை ரூ.15 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததாகவும், அதனால் கடந்த ஒரு மாதமாக பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருந்த தக்காளி விலை திடீரென்று உயர்ந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.25 வரை விற்கப்பட்டு வந்த தக்காளி நேற்று ஒரே நாளில் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.60 வரை தக்காளி விற்பனை ஆனது. இதை விட கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை வெளி மார்க்கெட், சில்லறை கடைகளில் விற்கப்படுகிறது.

we-r-hiring

வழக்கமாக 70 முதல் 80 லாரிகள் வரும் தக்காளி நேற்று  40 லாரிகள் மட்டுமே கோயம்பேடு வருகை தந்து உள்ளது. இதனால் இந்த விலையேற்றம் என வியாபாரிகள் கூறுகின்றனர். இந்த நிலையில் இன்று 60 லாரிகளில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல், கடந்த 2 நாட்கள் முன்பு வரை ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனையான பீன்ஸ், நேற்று 70 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விற்கப்பட்டது. இந்த நிலையில் வரத்து அதிகரிப்பால் இன்று ஒரு கிலோ பீன்ஸ் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல் அவரை 50  ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை ஏற்ற இறக்கம்  பொங்கல் வரை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

நேற்றைய கோயம்பேடு மார்க்கெட் காய்கறி நிலவரம்

  1. தக்காளி பெரிய பாக்ஸ் kg 60 ரூபாய்
  2. வெங்காயம் kg 30
  3. சின்ன வெங்காயம் kg 60
  4. பீன்ஸ் kg 70
  5. அவரைக்காய் kg 100
  6. கேரட் kg 50
  7. வெண்டைக்காய் kg 15
  8. பச்சை மிளகாய் kg 35
  9. பீட்ரூட் kg 45
  10. முள்ளங்கி kg 30
  11. குடைமிளகா kg 70
  12. கத்தரிக்காய் kg 40
  13. மாங்காய் kg 50, kg 25
  14. இஞ்சி kg 80
  15. புடலங்காய் kg 25
  16. சுரைக்காய் kg 20
  17. பச்சை பட்டாணி kg 200
  18. சேனைக்கிழங்கு kg45
  19. பாவக்காய் kg 30
  20. தேங்காய் Kg 60
  21. கோஸ் kg20
  22. முருங்கா kg 80
  23. உருளைக்கிழங்கு kg 25
  24. பரங்கிக்காய் kg 25
  25. லெமன் kg 50

இன்றைய கோயம்பேடு மார்க்கெட் காய்கறி நிலவரம்

  1. தக்காளி பெரிய பாக்ஸ் kg 40
  2. வெங்காயம் kg 30
  3. சின்ன வெங்காயம் kg 60
  4. பீன்ஸ் kg 50
  5. அவரைக்காய் kg 50
  6. கேரட் kg 40
  7. வெண்டைக்காய் kg 15
  8. பச்சை மிளகாய் kg 35
  9. பீட்ரூட் kg 45
  10. முள்ளங்கி kg 30
  11. குடைமிளகா kg 70
  12. கத்தரிக்காய் kg 50
  13. மாங்காய் kg 50 kg 25
  14. இஞ்சி kg 80
  15. புடலங்காய் kg 25
  16. சுரைக்காய் kg 20
  17. பச்சை பட்டாணி kg 200
  18. சேனைக்கிழங்கு kg 45
  19. பாவக்காய் kg 30
  20. தேங்காய் Kg 60
  21. கோஸ் kg20
  22. முருங்கா kg 80
  23. உருளைக்கிழங்கு kg 25
  24. பரங்கிக்காய் kg 25
  25. லெமன் kg 50

42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொல்காப்பிய பூங்காவை திறந்து வைத்தாா் – முதல்வா்

MUST READ