spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsசண்முக பாண்டியன் நடிக்கும் 'கொம்புசீவி' பட முதல் பாடல் வெளியீடு!

சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்புசீவி’ பட முதல் பாடல் வெளியீடு!

-

- Advertisement -

சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்புசீவி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.சரத்குமார், சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்புவிஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் கடைசியாக ‘படை தலைவன்’ திரைப்படம் வெளியானது. அடுத்தது இவரது நடிப்பில் ‘கொம்புசீவி’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. கடந்த 1996 ஆம் ஆண்டு உசிலம்பட்டியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் சண்முக பாண்டியன் உடன் இணைந்து சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சண்முக பாண்டியன் நடிக்கும் 'கொம்புசீவி' பட முதல் பாடல் வெளியீடு! மேலும் தரணிகா, காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கி இருக்கிறார். ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ‘உன்ன நான் பாத்தா’ எனும் முதல் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

we-r-hiring

இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாடி இருக்கும் நிலையில் யுகபாரதி பாடல்வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ