பல்லாவரம் வார சந்தையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். மூட்டை மூட்டையாக சிக்கிய காலாவதியான குழந்தைகளின் தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பல்லாவரம் பகுதியில் வெள்ளிக்கிழமைகள் மட்டும் இயங்கும் முக்கிய சந்தையாக FRIDAY MARKET செயல்பட்டு வருகிறது. இதில் 2000 மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திண்டிவனம் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள ஏராளமானோர் பொருள்களை வாங்கி செல்வதும் வழக்கம். அது போன்று இன்று கடைகள் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ்பாபு உள்ளிட்ட 10 அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது ஆவடி பகுதியை சார்ந்த ஐயப்பன் என்பவர் அமைத்திருந்த கடையில் விற்பனைக்காக வைத்திருந்த பிஸ்கட்,சாக்லேட்,சேமியா,நூடுல்ஸ் போன்ற பொருட்களில் தயாரிக்கப்பட்ட தேதி காலாவதி ஆகியும் தேதிகள் அளிக்கப்பட்டும் இருந்தது. அது மட்டும் இன்றி பேக்கிங் செய்யப்பட்ட அரிசிகளில் எந்த விதமான நிறுவனங்களின் பெயர்களோ உணவு அங்கீகாரமோ பெறாமல் கெட்டுப் போயிருந்தது.

உடனடியாக அவை அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் விற்பனை செய்த ஆவடி பகுதியை சார்ந்த ஐயப்பன் என்பவரையும் பிஸ்கட்,சேமியா,அரிசி சாக்லேட் போன்ற 500 கிலோ எடை கொண்ட பொருட்களையும் பறிமுதல் செய்து பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் இந்த கெட்டுப் போன பொருட்களை இவர்கள் யாரிடமிருந்து வாங்குகிறார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் இதுதான்…. தீயாய் பரவும் தகவல்!


