spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை – மீன்வளத்துறை எச்சரிக்கை

மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை – மீன்வளத்துறை எச்சரிக்கை

-

- Advertisement -

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் நிலையில் பழவேற்காடு உட்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை – மீன்வளத்துறை எச்சரிக்கைவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக பழவேற்காடு உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். வங்கக்கடல் பகுதிகளில் புயல் உருவாகி 90 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக இன்றே கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மீனவர்களின் படகுகள், மீன்பிடி கலன்கள், வலைகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் பாதுகாப்பாக வைக்கவும் மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘ஜங்கிள் ராஜ்யத்தை’ தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கே மீண்டும் வாக்களிக்க வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்

MUST READ