பெரம்பலூர் அருகே பயன்பாடின்றி இருந்த பெட்ரோல் பங்க் கிணற்றை தோண்டி மணல் எடுக்கும் போது மணல் சரிவில் சிக்கி 50 வயது கூலித் தொழிலாளி உயிரிழந்துள்ளாா்.


திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை அடுத்துள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரமாக சென்னையை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவருக்கு சொந்தமான செயல்பாடற்ற பெட்ரோல் பங்ங் ஒன்றில் இருந்த எண்ணை கிணற்றை அகற்றும் பணி நடைபெற்று வந்துள்ளது. களரம்பட்டி கிராமத்தை சேர்ந்த 5 தொழிலாளிகள் பணியிலிருந்ததாக தெரிகிறது. அப்போது வேலுசாமி (50) என்ற தொழிலாளி ஒருவர் மீது திடீரென மணல் சரிந்து மூடியுள்ளது. இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு தொழிலாளி வேலுசாமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீஸார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் இறந்தவர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் காயமுற்ற சக தொழிலாளிகளான வினோத்குமார் , தேவராஜ், கவிதாஸ் மற்றும் சித்திரசேனன் உள்ளிட்ட 4 பேர் பெரம்பலூர் அரசுமருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாஜகவை விட்டு பிரிய நினைத்த நேரத்தில் அஜித் பவார் மரணம்…சந்தேகத்தை கிளப்பிய மம்தா பேனர்ஜி
