Homeசெய்திகள்மாவட்டம்கோத்தகிரி: தேயிலை தோட்டங்களின்‌ நடுவே ஜகரண்டா மலர்கள் – சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு

கோத்தகிரி: தேயிலை தோட்டங்களின்‌ நடுவே ஜகரண்டா மலர்கள் – சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு

-

- Advertisement -

கோத்தகிரி கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் தேயிலை தோட்டங்களின்‌ நடுவே மலர்ந்துள்ள ஜகரண்டா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.கோத்தகிரி: தேயிலை தோட்டங்களின்‌ நடுவே ஜகரண்டா மலர்கள் – சுற்றுலா் பயணிகள் கண்டுகளிப்புநீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள், சுற்றுலா தலங்கள் அதிக அளவில் உள்ளன. இதில் கோத்தகரியும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், பனிக்காலம் முடிந்து தற்போது கோடை காலம் துவங்கிய நிலையில், கோத்தகிரி பகுதியில் இதமான காலநிலை நிலவி வருகிறது. ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை ஜகரண்டா மலர்கள் பூத்துக்குலுங்கும்.

ஜகரண்டா மலர்கள் பூக்கும் மரங்கள் நிழல் தரும் மரமாகவும், தேயிலை தோட்டங்களை அழகுப்படுத்தும் வேலியாகவும் ஆங்கிலேயர் காலத்தில் நடவு செய்யப்பட்டது. இந்த மரங்கள் ஆண்டுக்கு ஒரு முறை இலைகள் உதிர்ந்து மலர்கள் மட்டும் ஊதா நிறத்தில் பூத்துக்குலுங்கும்.

நீட் தேர்வு: மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் – தேசிய தேர்வு முகமை வேண்டுகோள்

we-r-hiring

MUST READ