Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் தேர்வு: மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் - தேசிய தேர்வு முகமை வேண்டுகோள்

நீட் தேர்வு: மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் – தேசிய தேர்வு முகமை வேண்டுகோள்

-

- Advertisement -

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெறுவதில் தொடரும் சிக்கல், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இணையதளத்தை பயன்படுத்தியதால் ஏற்படும் வழக்கமான சிக்கலே தவிர மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என தேசிய தேர்வு முகமை வேண்டுகோள் விடுத்துள்ளது.நீட் தேர்வு: மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் - தேசிய தேர்வு முகமை வேண்டுகோள்மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் “நீட் நுழைவு தேர்வில்” தகுதி பெற்றால் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். 2026-ம் ஆண்டுக்கான நீட் நுழைவு தேர்வு மே 3ம் தேதி அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. நடப்பாண்டு நீட் நுழைவு தேர்வுக்காக சுமார் 22.79 லட்சம் மாணவ மாணவிகள் நாடு முழுவதும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்துள்ள நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் தொடங்கியுள்ளது.

இருப்பினும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஹால் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதற்கு தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி தற்காலிக தொழில்நுட்ப சிக்கலை மாணவர்கள் எதிர்கொள்வதை தேசிய தேர்வு முகமை கவனத்தில் கொண்டுள்ளதாகவும், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவ மாணவிகள் இணையதளத்தை அணுகும் போது ஏற்படக்கூடிய வழக்கமான சிக்கலை இது எனவும் விளக்கம் அளித்துள்ளனர். அதே நேரத்தில் மாணவர்கள் யாரும் இதனால் அச்சப்பட தேவையில்லை என விளக்கம் அளித்துள்ளதோடு,  Google தளத்தை தவிர Chorome & Firefox போன்ற பிற தளங்களையும் ஹால் டிக்கெட் தரவிறக்கம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளனர்.

we-r-hiring

மேலும் நீட் தேர்வுக்கு மொத்தம் 22.79 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ள நிலையில், அதில் 11 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் ஏற்கனவே ஹால் டிக்கெட் தரவிறக்கம் செய்து விட்டதாகவும், சிக்கலை சந்தித்து வரும் பிற மாணவர்களுக்கும் ஹால் டிக்கெட் விரைவில் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை முன்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குறிச்சி: டன் கணக்கில் தேங்கி கிடக்கும் மருத்துவ கழிவுகள் – தீ வைத்து எரிக்காமல் அகற்ற கோரிக்கை

MUST READ