Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் விலக்கும், நீட் எதிர்ப்பும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கொள்கை; இது தவெகவின் கொள்கையா இல்லையா? -...

நீட் விலக்கும், நீட் எதிர்ப்பும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கொள்கை; இது தவெகவின் கொள்கையா இல்லையா? – ஆளூர் ஷானவாஸ் கேள்வி!

-

- Advertisement -

திராவிடர் கழகம் நடத்தவிருந்த நீட் தேர்வு எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்திற்குத் தவெக அரசு தடை விதித்துள்ளதோடு, பெரியார்திடலில் காவல்துறையைக் குவித்துத் தடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷானவாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.நீட் விலக்கும், நீட் எதிர்ப்பும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கொள்கை; இது தவெகவின் கொள்கையா இல்லையா? - ஆளூர் ஷானவாஸ் கேள்வி!

இது குறித்து ஆளூர் ஷானவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “திராவிடர் கழகத்தின் நீட் எதிர்ப்புப் பரப்புரைப் பயணம் என்பது ஏதோ இப்போது திடீரெனத் திட்டமிடப்பட்ட ஒன்றல்ல. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போதும், திமுக ஆட்சியின் போதும் இதே பரப்புரை பலமுறை தடையின்றி நடைபெற்றுள்ளது. ஆசிரியர் கி.வீரமணி அவர்களே தமிழ்நாடு முழுவதும் நேரில் பயணித்துப் பரப்புரை செய்துள்ளார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அத்தகைய நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டுள்ளேன்.

we-r-hiring

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கும், திமுகவுக்கும் நீட் எதிர்ப்பு என்பது எப்படி உறுதியான கொள்கை முடிவாக இருந்ததோ, அதேபோல் தான் இப்போது ஆட்சியில் உள்ள தவெகவுக்கும் நீட் எதிர்ப்பு என்பது கொள்கை முடிவு என்று அவர்கள் கூறினார்கள். அந்த அடிப்படைக் கொள்கையை வலியுறுத்தித் தான் தற்போதும் தி.க. பரப்புரை மேற்கொள்ள முயல்கிறது.”

நீட் விலக்கும், நீட் எதிர்ப்பும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கொள்கை; இது தவெகவின் கொள்கையா இல்லையா? - ஆளூர் ஷானவாஸ் கேள்வி!

அன்று அனுமதி, இன்று தடை ஏன்?
முந்தைய காலக்கட்டங்களில் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்களது ஆட்சியில் இந்தப் பரப்புரைகளுக்கு முழுமையான அனுமதி அளித்திருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், “அன்று அதிமுகவும் திமுகவும் அனுமதித்த ஒரு பரப்புரையை, இன்று தவெக அரசு மட்டும் தடுப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “நீட் விலக்கும், நீட் எதிர்ப்பும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கொள்கையாகும். அப்படி இருக்கையில், இது தவெகவின் கொள்கையா இல்லையா?” என்றும் ஆளூர் ஷானவாஸ் தனது அறிக்கையில் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். தி.க. பயணத்திற்கு விதிக்கப்பட்ட இந்தத் தடை அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திராவிட கொள்கைகளை வீழ்த்த ஆர்.எஸ்.எஸ். – பாஜகவின் தத்துப் பிள்ளை தான் விஜய் -அரசியல் விமர்சகர் ஹரிஷ் இப்ராஹிம் பகீர்

MUST READ