தமிழக அரசியலில் அடுத்தடுத்து சினிமா பிரபலங்களின் வருகை குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. சமீபத்திய அரசியல் கள நிலவரங்கள் மற்றும் எதிர்கால சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி தனது கருத்துக்களை முன்வைத்துள்ளாா்.
ஜோதிடக் கணிப்புகளும், அரசியல் யூகங்களும்
தமிழக அரசியலில் அடுத்தடுத்த மாற்றங்கள் குறித்து ஜோதிடர்கள் மற்றும் ஊடகங்களில் வலம்வரும் கணிப்புகள் விவாதப் பொருளாகியுள்ளன. ஒருபுறம் தவெக தலைவர் விஜய் அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், மறுபுறம் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரக்கூடும் என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளன.

இதுகுறித்துச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களின்படி, எதிர்காலத்தில் தவெக முதலிடத்திலும், தனுஷ் தொடங்கவிருக்கும் கட்சி இரண்டாம் இடத்தையும் பிடிக்க வாய்ப்புள்ளதாகவும், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களது இடத்தை இழக்க நேரிடும் என்றும் யூகங்கள் விவரிக்கப்படுகின்றன. மேலும், நடிகர் அஜித் குமார் போன்றோர் தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கும் சூழலில், இளம் நடிகர்களின் பெயர்களும் எதிர்கால அரசியல் வரிசையில் அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சினிமா பிரபலங்களின் அரசியல் பிரவேசமும், கிண்டல்களும்
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அரசியல் கட்சித் தொடங்குவதும், அதற்குச் சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்புகளும் எழுவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, எதிர்காலத் தேர்தல் முடிவுகள் மற்றும் முதலமைச்சர் பதவிகள் குறித்து இணையத்தில் பல்வேறு கற்பனையான கருத்துக்களும், கலாய்ப்புகளும் (Memes) வைரலாகி வருகின்றன.
அரசியல் களத்தில் கொள்கைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறைந்து, சினிமா கவர்ச்சி மற்றும் நரேட்டிவ்கள் மட்டுமே முன்னிறுத்துப்படுவதாக விமர்சகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சினிமா பிரபலங்களின் இந்த அரசியல் வருகை தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
