malignant bone tumor என்ற அறிய வகை விலா எலும்புகளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய கூலி தொழிலாளிக்கு டைட்டாணியம் உலோகத்தால் ஆன செயற்கை விலா எலும்பு பொறுத்தி கிண்டி கலைஞர் அரசு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.
malignant bone tumor என்ற விலா எலும்பு புற்றுநோய் பாதிப்பு வெகு சிலருக்கு மட்டுமே இருக்கும், அதுவும் வயதானவர்களுக்கு மட்டுமே பாதிக்கும். இந்த புற்றுநோய் ஏற்பட்டால் விலா எலும்புகளை புற்றுநோய் செல்கள் அறித்துவிடும். இதனால் மார்பு பகுதியில் உள்ள உறுப்புகள் செயல்படுவதிலும், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 59 வயதுடைய கூலித்தொழிலாளிக்கு மார்பு விலா எலும்பு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது.
நெஞ்சு பகுதி அதிக வீக்கம் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அப்போது புற்றுநோய் கட்டி இருப்பதாக பரிசோதனை முடிவுகள் தெரியவந்தது. அதனை அகற்ற தனியார் மருத்துவமனையில் பல லட்சம் ஆகும் எனவும், உயிர் பிழைக்க 50% மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பல லட்சம் ரூபாய் தன்னிடம் இல்லை என்பதால் கிண்டி கலைஞர் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோயியல் துறையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டனர்.

அப்போது அவரது நெஞ்சு பகுதியில் இருந்து 5 கிலோ புற்றுநோய் கட்டியை அகற்றியுள்ளனர். அதேபோல விலா எலும்புகளிலும் புற்றுநோய் பாதிப்பு இருந்தது. அதனால், அந்த விலா எலும்புகளும் புற்றுநோய் செல்கள் அறித்துவிட்டது. விலா எலும்புகளையும் அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்கு மாற்றாக டைட்டாணியம் என்ற உலோகத்தால் ஆன விலா எலும்பு போன்ற வடிவமைப்பு தயாரித்து அதனை மருத்துவர்கள் பொறுத்தினர்.
இதுகுறித்து, சுஜய், புற்றுநோய் மருத்துவர், “இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் 13 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகியிருக்கும். அதேபோல விலா எலும்பு போன்ற டைட்டாணியம் உலோகம் 3D டெக்னாலஜி மூலம் வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக பொறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினாா்.
பிரபாகரனுக்கு(கூலி தொழிலாளி) அரசு மருத்துவமனையில் முதல் முறையாக முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் முழுவதும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவர்களார் கைவிடப்பட்ட நோயாளிக்கு மறுவாழ்வு வழங்கிய அரசு மருத்துவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
