மஞ்சள் உற்பத்தியிலும் வர்த்தகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும் ஈரோடு சந்தையில், கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்துவந்த மஞ்சள் விலை, கடந்த இரண்டு நாட்களாகச் சரிவைக் கண்டுள்ளது வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடையே கவனத்தைப் பெற்றுள்ளது. 
ஒரு மாத உயர்விற்குப் பின் சரிவு
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் சந்தைகளில் கடந்த ஒரு மாத காலமாக மஞ்சள் வரத்து மற்றும் தேவையின் அடிப்படையில் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் குவிண்டாலுக்கு நல்ல விலை கிடைத்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சந்தையில் எதிர்பாராத விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

இன்றைய விலை நிலவரம்
நேற்றைய விற்பனை விலையோடு ஒப்பிடுகையில், இன்று மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.300 வரை குறைந்துள்ளது. இன்றைய விற்பனை விலை: குவிண்டால் ஒன்றுக்கு ரூ.19,008 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வர்த்தகர்கள் எதிர்பார்ப்பு
மஞ்சள் விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் சரிவு தற்காலிகமானதுதானா அல்லது வரும் நாட்களில் மேலும் குறையுமா என்பது வரத்து மற்றும் வெளிசந்தை தேவையைப் பொறுத்தே அமையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். விலை சற்று குறைந்த போதிலும், சந்தைக்கு வரும் மஞ்சளின் அளவை பொறுத்து வரும் நாட்களில் விலை மீண்டும் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
